Aatu Eral Gravy in Tamil | ஆட்டு ஈரல் கிரேவி
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆட்டு ஈரல் கிரேவி செய்வது எப்படி.? (Aatu Eral Gravy in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். அசைவ பிரியர்கள் அனைவர்க்கும் மட்டன் ஈரல் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும், மட்டன் ஈரல் கிரேவி என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு அதன் சுவை இருக்கும். நாள், ஒரு சிலருக்கு ஆட்டு ஈரல் என்றால் பிடிக்காது. அப்படி சொல்பவர்களுக்கு ஆட்டு ஈரலில் கிரேவி செய்து கொடுங்கள். மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
குறிப்பாக ஆட்டு ஈரல் வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகளுக்கு ஆட்டு ஈரல் கிரேவி செய்து கொடுத்தால் மறுபடியம் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், ஆட்டு ஈரல் கிரேவி சுவையாக இருந்தால் மட்டுமே சாப்பிடுவார்கள் . ஆகையால், ஆட்டு ஈரல் கிரேவியை எப்படி சுவையாக செய்வது.? என்பதை இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Aatu Eeral Gravy Seivathu Eppadi:
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- சோம்பு – 1/2 ஸ்பூன்
- மிளகு – 2 டீஸ்பூன்
- கசகசா – 1/2 டீஸ்பூன்
- பட்ட மிளகாய் – 2
- கறிவேப்பிலை – 1 கொத்து
ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- ஆட்டு ஈரல் – 400 கிராம்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – 2 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
ஆட்டு ஈரல் கிரேவி செய்முறை:
- முதலில் மசாலா அரைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடுப்பில், ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் தேவையான பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து, சிவரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதனை சிறிது நேரம் ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து. சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து தக்காளியை அரைத்து சேர்த்து நன்றாக கலந்து வதக்க வேண்டும்.
- வதங்கியதும், அதில் சசுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு ஈரலை சேர்த்து, 2 டீஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
- அடுத்து, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இந்நிலையில் உப்பு சரிபார்த்து, உப்பு தேவைப்பட்டால் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வரை வேகவைக்கவும்.
- அதன் பிறகு, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான வாசனையான ஆட்டு கிரேவி தயார்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |