ஓவன் இல்லாமல் கேக் செய்வது எப்படி?
How to Make Cake at Home / கேக் செய்வது எப்படி:-
ஓவன் இல்லாமல் கேக் செய்முறை: ஈஸியா அடுப்பில் கேக் செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க… இந்த கேக் செய்வதற்கு குக்கர் வேண்டாம், மைக்ரோ ஓவன் வேண்டாம். எல்லாரும் அடுப்பிலேயே மிக எளிமையாக கேக் செய்துவிடலாம். சரி வாங்க அடுப்பில் கேக் செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.
இதை தொடர்ந்து சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழம் கேக் செய்வது எப்படி? அதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மைதா மாவு கேக் செய்வது எப்படி?
கேக் செய்ய தேவையான பொருட்கள்:-
- சர்க்கரை – 3/4 கப்
- முட்டை – 3
- மைதா மாவு – 3/4 கப்
- பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டோரா கேக் செய்வது எப்படி? |
அடுப்பில் கேக் செய்வது எப்படி?
கேக் செய்வது எப்படி: ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அவற்றில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி hand beater கொண்டு நன்றாக அடித்து கொள்ளவும்.
பின் அடித்த முட்டையுடன் 3/4 கப் சலித்த மைதா மாவு மற்றும் 3/4 கப் மிக்சியில் பவுடர் செய்த சர்க்கரை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
பிறகு 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து சூடேற்ற வேண்டும்.
பின் ஒரு நான்ஸ்டிக் கடாயை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் நெய் அல்லது பட்டர் ஏதேனும் ஒன்றை நன்றாக தடவிவிடுங்கள்.
பின் கலந்து வைத்துள்ள கேக் மாவை இந்த நான்ஸ்டிக் கடாயில் ஊற்றி, அடுப்பில் வைத்துள்ள தோசை கல் மீது வைத்து மூடிவிடுங்கள்.
பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 45 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.
45 நிமிடங்கள் கழித்த பின் அடுப்பிலிருந்து இறக்கி கேக்கை தனியாக எடுத்தால் சுவையான கேக் தயார். விருப்பமிருந்தால் இதனுடன் கிரீம் தடவியும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
இன்றைய சமையல் குறிப்பு..!
வாழைப்பழ கேக் செய்வது எப்படி (How to make banana cake recipe)
ஈஸியா கேக் செய்வது எப்படி? – அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ கேக் எப்படி நம் வீட்டில் ஈஸியான முறையில் செய்வது என்று இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க..!
இதையும் படிக்கவும் | பிரஷர் குக்கர் வேண்டாம், மைக்ரோ ஓவன் வேண்டாம் கேக் செய்யலாம் வாங்க..! |
மைதா மாவில் கேக் செய்வது எப்படி என்று இந்த பகுதில் நாம் காண்போம் வாங்க..!
வாழைப்பழ கேக் (banana cake recipe) செய்ய தேவையான பொருட்கள்:
- பழுத்த வாழைப்பழம் – 4
- சர்க்கரை – 1&1/4 கப்
- வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- வெண்ணிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி
- மைதா – 2 & 1/2 கப்
- இலவங்க பட்டை தூள் – 2 தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி
- உப்பு 1/2 தேக்கரண்டி
- பால் – 1/2 கப்
- தயிர் – 1/4 கப்
- வால்நட்ஸ் / வறுத்த முந்திரி பருப்பு – தேவையான அளவு.
வாழைப்பழ கேக் செய்முறை (How to make banana cake recipe):
அடுப்பில் கேக் செய்வது எப்படி?இந்த வாழைப்பழ கேக்கை மைக்ரோ ஓவன் இல்லாமல் வெறும் பிரஷர் குக்கரில் மிக ஈஸியாகவே செய்துவிட முடியும். சரி வாங்க வாழைப்பழ கேக் எப்படி செய்வது என்று இப்போது நாம் காண்போம்..!
வாழைப்பழ கேக் செய்வது எப்படி? ஸ்டேப்: 1
சாதா கேக் செய்வது எப்படி: வாழைப்பழ கேக் செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருக்கி வைத்து கொள்ளவும்.
பின்பு மற்றொரு பவுலில் நான்கு பழுத்த வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும், இந்த நறுக்கிய வாழைப்பழத்துடன் 1 1/4 கப் சர்க்கரை மற்றும் உருக்கி வைத்துள்ள வெண்ணெயை சேர்த்து நன்றாக ஒரு கரண்டியை கொண்டு கிளறி கொள்ளவும்.
அடுத்ததாக இந்த கலவையுடன் இரண்டு ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கிளறி தனியாக வைத்து கொள்ளவும்.
வாழைப்பழ கேக் செய்வது எப்படி? ஸ்டேப்: 2
அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில், 2 1/2 கப் மைதா, இரண்டு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், இரண்டு ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
பின்பு இந்த கலவையுடன் வாழைப்பழ கலவையை சேர்த்து Hand Beater பயன்படுத்தி நன்றாக மிக்ஸ் பண்ணவும், பின்பு அதனுடன் 1/2 கப் பால் சேர்த்து திரும்பவும் hand beater கொண்டு நன்றாக கிளறி கொள்ளவும்.
வாழைப்பழ கேக் செய்வது எப்படி? ஸ்டேப்: 3
பின்பு அதனுடன் 1/4 கப் கெட்டியான தயிர் சேர்த்து திருப்பவும் hand beater கொண்டு கலவையை நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது வாழைப்பழ கேக் (banana cake recipe) செய்வதற்கு கலவை தயார்..!
இப்பொழுது ஒரு கேக் டின்னை எடுத்து கொள்வோம். அவற்றில் சிறிதளவு வெண்ணெயை தடவி சிறிதளவு மைதா மாவை தூவி இந்த டின்னில் கலந்து வைத்துள் கலவையை சேர்த்து அதன் மேல் வறுத்த முந்திரியை தூவிவிடவும்.
பின்பு அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு சிறிய பாத்திரம் அல்லது ஷ்டான்ட் வைத்து, அதன் மேல் இந்த கேக் டின்னை வைக்க வேண்டும்.
வாழைப்பழ கேக் செய்முறை ஸ்டேப்: 4
பின்பு பிரஷர் குக்கரை மூடி, குறைந்தது 45 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை அடுப்பை மிதமான சூட்டில் நன்றாக வேகவைக்க வேண்டும்.
பிறகு 45 நிமிடங்கள் கழித்து கேக்கை அடுப்பில் இருந்து இறக்கி, கேக் டின்னை மெதுவாக எடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான வாழைப்பழம் கேக் தயார்.
அனைவருக்கு அன்புடன் பரிமாறவும்.
ஈஸியா கேக் செய்வது எப்படி (banana cake recipe) என்று தெரிந்து கொண்டீர்களா? வீட்டில் செய்து அசத்துங்கள்..!
இதையும் படிக்கவும் | ஈஸியா பப்ஸ் செய்யலாம் வாங்க !!! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |