பீப் பிரியாணி செய்வது எப்படி? | How to Make Beef Biryani in Tamil

Advertisement

பீப் பிரியாணி செய்வது எப்படி?

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இந்த பிரியாணியில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். அந்த வகையில் பாய் வீட்டில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய பீப் பிரியாணி செய்வது எப்படி? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பீப் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

ஒரு கிலோ மாட்டு இறைச்சியில் பீப் பிரியாணி செய்ய தேவைப்படும் பொருட்கள்.

  1. மாட்டு இறைச்சி – ஒரு கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது – 6 1/2 டேபிள் ஸ்பூன்
  3. எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
  4. நெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
  5. கிராம்பு – 15
  6. பிரியாணி இலை – இரண்டு
  7. ஏலக்காய் – 5
  8. இலவங்க பட்டை –  3 துண்டு
  9. பெரிய வெங்காயம் – 650 கிராம் (பொடிதாக நறுக்கியது)
  10. கொத்தமல்லி இலை – 1/2 கைப்பிடியளவு
  11. புதினா இலை – 1/2 கைப்பிடியளவு
  12. பச்சைமிளகாய் – 15
  13. மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
  14. மல்லித்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  15. பிரியாணி மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன்
  16. தக்காளி – நான்கு நறுக்கியது
  17. தயிர் – 300 கிராம்
  18. பாஸ்மதி அரிசி – இரண்டு கப்
  19. எலுமிச்சை சாறு – 1/2 டம்ளர்
  20. உப்பு – தேவையான அளவு

பீப் பிரியாணி செய்யும் முறை:

ஸ்டேப்: 1

முதலில் 1 கிலோ மாட்டு இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். பின் அதனை குக்கரில் சேர்ந்து கறி முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளுகள், அதனுடன் 1 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு வேகவைத்து இறக்கிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் அடுப்பில் அடிகனமான ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அவற்றில் 5 டேபிள் ஸ்பூன் ஆயில், 2 1/2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடேறிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

எண்ணெய் சூடேறியதும் கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்க பட்டை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

பிறகு நறுக்கிய வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் 6 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 5

இஞ்சி பூண்டு விழுதினை பச்சைவதனை நீங்கியதும். கொத்தமல்லி இலை, புதினா இலை மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

 

ஸ்டேப்: 6

பிறகு வேகவைத்த கறியினை சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கிவிடுங்கள். பிறகு 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், பிரியாணி மசாலா 1/4 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கிவிடவும்.

ஸ்டேப்: 7

மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் நறுக்கிவைத்துள்ள தக்காளியினை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பின், ஒரு கப் கெட்டியான தயிரினை சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 8

மசாலாவில் தயிர் நன்கு வதங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் அந்த ஸ்டேஜ் வரை மசாலா கலவையை வதக்கிவிட வேண்டும். பிறகு 1 1/2  தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் (தண்ணீர்க்கு பதில் கறியை வேகவைத்த தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளலாம்). அதேபோல் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். பின் பாத்திரத்தை மூடி நன்றாக கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 9 

கலவை நன்றாக கொத்தி வந்ததும் 2 கப் பாஸ்மதி அரிசி சேர்த்து கிளறிவிடுங்கள். கடாயை மூடி 5 நிமிடங்கள் அரிசியை மிதமான சூட்டில் வேகவைக்கவும். பின் கடாயை திறந்து 1/2 டம்ளர் எலுமிச்சை சாறினை சேர்த்து கிளறிவிடுங்கள்.

ஸ்டேப்: 10

கலவையில் தண்ணீர் ஓரளவு வற்றியதும் ஃபாயில் பேப்பரை பயன்படுத்தி காற்று புகாத அளவிற்கு பாத்திரத்தை மூடி கொள்ளுங்கள். பின் பெரிய தட்டினை கொண்டு பிரியாணி செய்துள்ள பாத்திரத்தை மூடிக்கொள்ளுங்கள். பின் அந்த பாத்திரன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 1/2 மணி நேரம் வரை தம் போட வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து பாத்திரைத்ததை திறந்து பாரத்தால் சுவையான மற்றும் உதிரி உதிரியாக பீப் பிரியாணி தயார். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..

ருசியான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement