கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? Gobi Manchurian Recipe in Tamil..!

Advertisement

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? Gobi Manchurian Recipe in Tamil..!

வீட்டிலேயே ஈஸியா கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? (Gobi Manchurian Recipe in Tamil) என்று இந்த பகுதியில் நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

  1. காலிபிளவர் – ஒன்று
  2. கான்பிளவர் மாவு – இரண்டு ஸ்பூன்
  3. அரிசி மாவு -ஒரு ஸ்பூன்
  4. மைதா – ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  7. கலர் பொடி – சிறிதளவு
  8. இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  9. தயிர் – ஒரு ஸ்பூன்
  10. சோயா சாஸ் – சிறிதளவு
  11. டொமேடோ சாஸ் – சிறுதளவு
  12. சில்லி சாஸ் – சிறிதளவு
  13. இஞ்சி, பூண்டு – சிறிதளவு பொடிதாக நறுக்கி வைத்து கொள்வோம்.
  14. பெரிய வெங்காயம் – பொடிதாக சிறிதளவு வைத்து கொள்ளவும். பின்பு நீளமாக சிறிதளவு நறுக்கி வைத்து கொள்ளவும்.
  15. குடைமிளகாய் – ஒன்று
  16. கருவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  17. எண்ணெய் – ஒரு லிட்டர்.
100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..!

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? செய்முறை விளக்கம் இதோ:

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? (Gobi Manchurian Recipe in Tamil) ஸ்டேப்: 1

காலிபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி வெந்நீரில் சிறிது நேரம் வேகவைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு பெரிய பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மைதா மாவு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு உப்பி ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? (Gobi Manchurian Recipe in Tamil) ஸ்டேப்: 2

பிறகு அந்த கலவையில் காலிபிளவர் மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவில் காலிபிளவர் முழுகும் அளவிற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்பு இந்த கலவையை 1/2 மணி நேரம் வரை நன்றாக ஊறவைத்து கொள்ளவும்.

காலிபிளவர் நன்றாக ஊறியதும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அவற்றில் இந்த காலிபிளவரை போட்டு நன்றாக பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பலவகையான பன்னீர் ரெசிபி செய்முறை தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? (Gobi Manchurian Recipe in Tamil) ஸ்டேப்: 3

பின்பு மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் நறுக்கி வைத்துள்ள பூண்டு மற்றும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவற்றில் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

பிறகு நீளமாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை மற்றும் குடைமிளகாயை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? (Gobi Manchurian Recipe in Tamil) ஸ்டேப்: 4

பின்பு இவற்றில் டொமேட்டோ சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

பிறகு அவற்றில் பொறித்து வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? (Gobi Manchurian Recipe in Tamil) ஸ்டேப்: 5

இறுதியாக கருவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian Recipe in Tamil) தயார்.

அனைவருக்கும் இதை செய்து அன்புடன் பரிமாறவும்.

சுவையான சிக்கன் பரோட்டா செய்முறை..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement