How to Make Healthy Chapati Flour in Tamil
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் வீட்டிலேயே சப்பாத்தி மாவை ரெடி செய்வது எப்படி என்பதை பார்ப்போம், பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் தோசை, இட்லி தான் அதிகம் சமைத்து வருகிறார்கள். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு கடைகளில் விற்கும் சப்பாத்தி மாவை வாங்கி பயன்படுத்துவீர்கள். இந்த மாவில் கலப்படம் அதிகம் இருப்பதால் பல்வேறு நோய்கள் வருவதை எண்ணி வாங்குவதை குறைத்து கொண்டு வருகிறோம். அதனால் வீட்டிலேயே நல்ல சத்தான சப்பாத்தி மாவு ரெடி செய்யலாம் அதை பற்றி இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள் :
- உலர்ந்த கோதுமை-2 கிலோ
- ஓட்ஸ் – 100 கிராம்
- ராகி – 100 கிராம்
- சோளம் – 50 கிராம்
- கருப்பு சுண்டல் –100 கிராம்
- காராமணி – 100 கிராம்
- பச்சைப்பயறு –100 கிராம்
- கம்பு – 100 கிராம்
- வெள்ளை சுண்டல் – 100 கிராம்
- ஆளி விதை – 50 கிராம்
- சூரியகாந்தி விதை – 50 கிராம்
மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா.?
சப்பாத்தி மாவு செய்யும் முறை:
ஸ்டெப் :1
முதலில் உலர்ந்த கோதுமை 2 கிலோவை தனியாக எடுத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், ராகி, சோளம், கருப்பு சுண்டல், காராமணி, பச்சைப்பயறு, கம்பு, வெள்ளை சுண்டல், ஆளி விதை, சூரியகாந்தி விதைகள் மற்றும் தனியாக எடுத்து வைத்த உலர்ந்த கோதுமையையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஸ்டெப் : 2
ஒரு காட்டன் துணியை எடுத்து வெயிலில் விரித்து அதன் மேலே எடுத்து வைத்த தானியங்களை காய வைக்கவும். இது போன்று வெயிலில் காய வைப்பதனால் சப்பாத்தி மாவு நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும். இந்த தானியங்களை ஒரு நாள் முழுவதும் வெயிலிலேயே காய வைக்கும் பொழுது கிளறி விட்டு காய விடவும்.
நலங்கு மாவு செய்வது எப்படி? & அதன் பயன்கள்..!
ஸ்டெப் :3
வெயிலில் காய வைத்த தானியங்களை கடைகளில் கொடுத்து அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை தட்டில் சேர்த்து ஆறவிடவும். அரைத்து வைத்த மாவில் ஒரு நான்கு கப் எடுத்து கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
அந்த மாவு நல்லா மிருதுவான அளவு வரும் வரை பிணையவும். அடுத்ததாக சிறு உருண்டையாக உருட்டி கொண்டு சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்.
பிறகு அடுப்பில் தோசை தவா வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு எடுத்தால் கடையில் வாங்கும் சப்பாத்தி மாவை விட வீட்டில் தயாரித்த மாவில் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |