வீட்டில் பாலே இல்லாமல் பன்னீர் செய்திடலாம் வாங்க..!

Advertisement

பாலே இல்லாமல் பன்னீர் செய்திடலாம் வாங்க..! How to Make Paneer Without Milk at Home in Tamil

பொதுவாக சிறிய குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய பால் சார்ந்த பொருள்களில் ஒன்று தான் பன்னீர். பன்னீரில் பலவகையான உணவுகளை செய்யலாம். அதாவது பன்னீர் டிக்கா, பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் சீஸ் பால்ஸ் ரெசிபி, பன்னீர் கிரேவி, பன்னீர் 65 இது போன்ற பல்வகையான டிஷ் செய்யலாம். (எங்களுக்கு பன்னீரில் செய்ய தெரிந்த உணவுகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Paneer recipe in tamil). 

அனைவருக்கும் பிடித்த இந்த பன்னீரை பெருபாலும் அனைவருமே கடையில் வாங்கி தான் சமைப்பதற்கு பயன்படுத்துவார்கள். இந்த பன்னீரை நாம் வீட்டிலேயே மிக எளிமையாக அதுவும் பாலே இல்லாமல் செய்ய முடியும். அதுவும் வேர்க்கடை, வினிகர் மற்றும் தண்ணீர்  இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும். அது எப்படி என்று தானே யோசிக்கிறீங்க. அதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • வேர்க்கடை – இரண்டு கப்
  • வினிகர் – ஒரு ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

பாலே இல்லாமல் பன்னீர் செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் இரண்டு கப் வேர்க்கடலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். ஒரு சுத்தமான பவுலில் சூடான நீரை நிரப்பி சுத்தமாக கழுவிய வேர்க்கடையை அதில் சேர்த்து 1 மணி நேரம் வரை நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பின் ஒரு மணி நேரம் கழித்து ஊறவைத்த வேர்க்கடலையை எடுத்து நன்றாக உலர்த்தி அதனுடன் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கெட்டியான பசை போன்ற நிலைக்கு வரும் வரை நன்றாக.

ஸ்டேப்: 3

இப்போகுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 லிட்டர் தண்ணீர் செய்து நாம் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை அவற்றை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கலந்துவிடுங்கள். ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக கலந்துவிட்ட பிறகு அடுப்பை அனைத்து விடுங்கள்.

ஸ்டேப்: 4

இப்பொழுது ஒரு வெள்ளை துணியை எடுத்துக்கொள்ளுங்கள், அது கார்டன் துணியாக இருக்க வேண்டும். அந்த துணியில் இந்த கலவையை ஊற்றி அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்றாக பிழிய வேண்டும். அவ்வாறு செய்யும்போது அந்த வேர்க்கடலையில் உள்ள பால் வெளியே வரும். அந்த பாலை பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாக பிழிந்து வடிகட்டிய பின்னர் துணியில் அரைத்த வேர்க்கடலை மட்டும் சக்கை தேங்கி நிற்கும். அதனை நாம் கடலை மிட்டாயோ அல்லது வேர்கடலை அல்வாவோ செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்டேப்: 5

நாம் பிழிந்து வைத்த பாலை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடேற்றவும். பால் சூடாவதற்குள் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வினிகர், நான்கு ஸ்பூன் தண்ணீர் செய்து கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

பால் நன்கு கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்து நாம் கலந்து வைத்துள்ள வினிகரை பாலில் சேர்த்து கலந்துவிடுங்கள். இந்த வேர்க்கடலை பால் இப்பொழுது திரிந்து வரும். இப்பொழுது மீண்டும் துணியை பயன்படுத்தி அவற்றில் உள்ள தண்ணீரை தனியா வடிகட்டி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 7

இப்பொழுது பன்னீர் தயார் வினிகர் வாசனை போக அந்த பனீரை 2 முதல் மூன்று முறை நன்றாக அலசி நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கூட தண்ணீர் இருக்கக்கூட அந்த அளவிற்கு நன்றாக தண்ணீரை பிழிந்து கொள்ளுங்கள். நன்றாக பிழிந்த பிறகு அந்த துணியில் ஒரு இறுக்கமான முடிச்சி போட்டு அதன் போல் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து ஒரு மணிநேரம் அப்படி வைத்திருங்கள்.

ஒரு மணி நேரம் கழித்து முடிச்சை அவிழ்த்து பார்த்தால் பன்னீர் தயார், பிறகு சிறு சிறு துண்டுகளா நறுக்கி சமைப்பதற்கு பயன்படுத்துங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement