வீட்டிலே ரோட்டுகடை ஸ்டைல் பானி பூரி செய்வது எப்படி?

Advertisement

பானி பூரி எப்படி செய்வது? | How to Make Pani Puri at Home in Tamil

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ஆனால் ஒரு சிலருக்கு பார்க்க ஆசையாக இருந்தாலும் வாங்கி சாப்பிட கஷ்டப்படுவார்கள் காரணம் அங்கு இருப்பது சுத்தமாக இருக்குமா என்று கேள்விகளை அவர்களுக்குள் கேட்டுக்கொண்டு சாப்பிட மறுப்பார்கள்.

ஒரு சிலருக்கு ஆசையாக இருந்தாலும், வாங்கி சாப்பிடமாட்டார்கள் வீட்டில் செய்து சாப்பிட நினைப்பார்கள். ஆனால் ரோட்டு கடைகளில் விற்கப்படுவது அது ஒரு தனி  விதமான டேஸ்ட் தான். அதிலும் ரோட்டு கடை பானி பூரி என்றால் சொல்லும்போதே வாய் ஊரும் சரி வாங்க இப்போது வீட்டில் எப்படி ரோட்டு கடை பானிபூரி செய்வது என்று பார்ப்போம்..!

Pani Puri Masala Recipe in Tamil:

தேவையான பொருட்கள்:

  • அவித்த உருளைக்கிழங்கு
  • அவித்த கருப்பு கொண்டக்கடலை
  • கொத்தமல்லி
  • புதினா
  • பச்சை மிளகாய்
  • ஜல்ஜீரா பொடி
  • கருப்பு உப்பு
  • சீரக தூள்
  • காராபூந்தி
  • ஆம்சூர் பொடி
  • உலர்ந்த திராட்சை
  • பேரிச்சைப்பழம்
  • சர்க்கரை
  • புளி தண்ணீர்
  • பிரிஞ்சி இலை
  • மிளகாய் தூள்
  • சுக்கு தூள்

செய்முறை: 

முதலில் பூரியை கடையில் வாங்கி கொள்ளலாம். பின்பு அதன் கூட சாப்பிட இரண்டு டிஷ் இருக்கும். ஒன்று ரசம் இன்னொன்று சட்னி இதை எப்படிசெய்வது மற்றும் பூரிக்குள் வைக்கும் மசாலாவையும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஸ்டேப்: 1

how to make pani puri at home

முதலில் அவித்த 3 உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் அதன் கூடவே அவித்து வைத்த கருப்பு கொண்டக்கடலை 1 கப் எடுத்துக்கொள்ளவும். கொஞ்சம் புதினா, இதற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் இது அனைத்தையும் சேர்த்து கைகளால் பிசைந்துகொள்ளவும். அதனை எடுத்து தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 2

how to make pani puri rasam

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும், அதில் 6 பச்சை மிளகாய், அரைக்கட்டு புதினா, அரைக்கட்டு கொத்தமல்லி, மாங்காயில் பாதி அளவு நறுக்கி அதையும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். அதனையும் தனியாக எடுத்து கொண்டு அதில் 3/4 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். பின்பு ஜல்ஜீரா பொடி 3 டேபிள் ஸ்பூன், கருப்பு உப்பு 1/2 டேபிள் ஸ்பூன், சீரக தூள் 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்துவிட்டு மேல் பக்கம் கொத்தமல்லி, காராபூந்தி தூவி தனியாக வைத்துவிடவும்.

இதையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க 👉👉 மஹாராஷ்டிரா ஸ்பெஷல் மசாலா பூரி செய்வது எப்படி..?

ஸ்டேப்: 3

இப்போது சட்னி செய்வோம் முதலில் கடாயை அடுப்பில் வைக்கவும். அதில் 3/4 லிட்டர் தண்ணீர், ஆம்சூர் அதாவது காய்ந்த மாங்காய் 8பீஸ், 25 கிராம் உலர்ந்த திராட்சை, 50 கிராம் பேரிசை பழம் இது அனைத்துமே 45 நிமிடம் வேகவிடவும்.

இப்போது ஓரளவு கொதிக்கும் அதில் 150 கிராம் சர்க்கரை, புளி தண்ணீர் 150 கிராம் இரண்டையும் அதில் சேர்க்கவும்,

பின்பு அனைத்தையும் 15 நிமிடம் வேகவைக்கவும், முக்கியமாக அதில் 2 பிரிஞ்சி இலை போட்டு கொதிக்க விடவும். இப்போது அதன் நிறம் மாறி கொஞ்சம் கெட்டியாக இருக்கும். அந்த நிலையில் சுக்கு பொடி 1/2 டீஸ்பூன், சேர்த்து கொதிக்க விட்டு இறங்கிடவும்.

how to make pani puri meetta satni

பின்பு ஒரு வடிகட்டியை வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் அதில் 3/4 லிட்டர் தண்ணீர், 1/2 டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

அவ்வளவு தான் பானிபூரிக்கு தேவையான அனைத்தும் ரெடி ஆகிவிட்டது வாங்க சாப்பிடலாம்.

how to make pani puri

முதலில் பூரியை எடுத்துக்கொள்ளவும் பின்பு அதில் உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்து அதில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் சட்டி, ஊற்றி கடைசியில் ரசத்தில் நனைத்து ஒரே வாயில் சாப்பிடால் சூப்பராக இருக்கும்.

இதையும் படியுங்கள்=> அரிசி மாவில் பூரி சுட முடியும்.! உங்களுக்கு தெரியுமா.?

இதுபோன்று சுவைசுவையான சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு 

 

Advertisement