டீ , காபி, ஹார்லிக்ஸ்-க்கு பதில் இனி இப்படி செய்து குடிக்கலாம்..! How to Make Protein Powder..!

How to Make Protein Powder

டீ , காபி, ஹார்லிக்ஸ்-க்கு பதில் இனி இப்படி செய்து குடிக்கலாம்..! How to Make Protein Powder..!

புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி?

பொதுவாக டீ, காபி, ஹார்லிக்ஸ் போன்ற பானங்களை நாம் அருந்துவோம். இருப்பினும் அவையெல்லாம் உடலுக்கு ஆரோக்கிய பலனை அளிக்கின்றதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் கூறவேண்டும்.

குழந்தைகளுக்கான ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்..!

 

சரி இந்த பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்க, உடலை என்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான Protein Powder புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி என்று இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!

ஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி? Homemade Horlicks For Kids

Protein Powder செய்ய தேவையான பொருட்கள்:

  1. வேர்க்கடலை – ஓரு கப்
  2. கம்பு – ஒரு கப்
  3. கோதுமை – ஒரு கப்
  4. பொட்டுக்கடலை – ஒரு கப்
  5. ஜவ்வரிசி – ஒரு கப்
  6. ஏலக்காய் – 4
  7. சுக்கு பொடி – ஒரு ஸ்பூன்

புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி?

சரி வாங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி? என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.

How to make protein powder in tamil step: 1

முதலும் அடுப்பில் ஒரு கடாய் அல்லது மண் சட்டியை வைத்து சூடுபடுத்தவும். கடாய் நன்கு சூடேறியதும், வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின் கம்பு பயிரினை அதே கடாயில் சேர்த்து பொன்னிறமாக வாசனை வரும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

How to make protein powder in tamil step: 2

பிறகு ஒரு கப் கோதுமையை சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

பின்பு இதே போன்று பொட்டுக்கடலை மற்றும் ஜவ்வரிசியை வறுத்து எடுக்க வேண்டும்.

How to make protein powder in tamil step: 3

இவ்வாறு வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவைத்து மிக்சி ஜாரில் தனித்தனியாக பவுடர் போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஜவ்வரிசியை அரைக்கும் போது அதனுடன் 4 ஏலக்காய் மற்றும் ஒரு ஸ்பூன் சுக்கு பவுடரை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

How to make protein powder in tamil step: 4

இவ்வாறு அரைத்த அனைத்து பொருட்களையும் சல்லடையால் நன்கு சலித்து விட்டு, ஒன்றாக கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலுடன் ஒரு ஸ்பூன் அரைத்த புரோட்டீன் பவுடன் மற்றும் தேவையான அளவு நாட்டு சர்க்கரை கலந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அருந்தலாம். மிகவும் சுவையாக இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வளரும் குழந்தைகள் அனைவரும் சாப்பிட வேண்டிய ஒரு ஹெல்தி ட்ரிங்..

கோதுமை மாவு அரைக்கும் முன் இந்த 7 பொருட்கள் சேருங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>samayal kurippugal