Vattalappam Recipe in Tamil | வட்லாப்பம் செய்வது எப்படி.?
பொதுவாக சிறுவர் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இனிப்பு வகையினை விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் இனிப்பு பிரியர்கள் என்றே சிலர் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு பண்டிகை ஸ்பெஷல் ரெசிபி அதுவும் இனிப்பு வகையை சேர்ந்த வட்லாப்பம் ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். வட்லாப்பம் தென்னிந்திய, இலங்கைத் தமிழ் பாரம்பரியமான உணவு வகையில்இதுவும் ஒன்று. வட்லாப்பம் ஒரு சாதாரண “முட்டை புட்டிங்” அல்லது “கேரமல் புட்டிங்” வகையை சேர்ந்தது. சரி வாங்க இந்த சுவையான வட்லாப்பம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
வட்லாப்பம் செய்வது எப்படி.? | Vattalappam Seivathu Eppadi:
தேவையான பொருட்கள்:
- முட்டை – 5
- சர்க்கரை – 200 கிராம்
- தேங்காய் – ½ மூடி
- நெய் – 1 டீஸ் ஸ்பூன்
- முந்திரி – 10
- உப்பு -1 சிட்டிகை
- Milk பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
ஓணம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!
வட்லாப்பம் செய்முறை | How to Make Watalappan Step by Step in Tamil:
- முதலில் முட்டையை நுரைபொங்கும் அளவிற்கு நன்றாக மிக்சியில் அடித்து கொண்டு, அதனுடன் மூன்று ஏலக்காய் சேர்த்து அடித்து வைத்து கொள்ளவும்.
- பின் தனியாக சர்க்கரையை மிக்சியில் பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு ½ மூடி தேங்காய் துருவலை மிக்சியில் சேர்த்து அரைத்து அதில் இருந்து முதலில் பிழியும் தேங்காய் பாலை மட்டுமே எடுத்துக் வேண்டும்.
- அடுத்து முந்திரியை நன்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- கடைசியாக பொடித்த சர்க்கரை, தேங்காய் பால் அதனுடன் அரைத்த முந்திரி மற்றும் Milk Powder சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- இப்போது தனியாக சிறிது முந்திரியை நெய்யில் வறுத்து கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கொள்ளவும். அத்துடன் 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- அடுத்தப்படியாக ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த கலவை சேர்த்து மூடி வைக்கவும்.
- அதன்பிறகு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த கலவை உள்ள பாத்திரத்தை வைத்து மூடி மிதமான சூட்டில் வேக வைக்கவும். வேக வைக்கும் போது வட்லாப்பதில் தண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ளவும்.
- பின் வெந்துவிட்டதா என்று பார்ப்பதற்கு சுத்தமான ஒரு குச்சியை விட்டு பார்க்கவும். அப்பிடி பார்க்கும் போது குச்சில் ஒட்டிவந்தால் வேகவில்லை என்று அர்த்தம். அதுவே ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம்.
- பின்பு குச்சியில் ஒட்டவில்லை என்றால் அடுப்பில் இருந்து வட்லாப்பத்தை இறக்கி விடலாம். அதன் பிறகு ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி பரிமாறலாம். இப்போது தித்திக்கும் சுவையான வட்லாப்பம் ரெடி.
வீட்டில் ரவா இருக்க அப்போ இந்த ஸ்வீட் செய்து அசத்துங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |