Homemade Tutti Frutti in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் புதுமையான மற்றும் அருமையான தகவல்தான். அது என்னவென்றால் வீட்டிலேயே டூட்டி ஃப்ரூட்டி செய்வது எப்படி.? என்பதை பற்றித்தான். பொதுவாக கேக், ஐஸ்கிரீம், பிஸ்கட் போன்றவற்றின் மீது அழகுக்காக மற்றும் சுவைக்காக தூவப்படும் டூட்டி ஃப்ரூட்டி எப்படி செய்கிறார்கள் என்று பலரும் சிந்தித்து இருப்பீர்கள். அப்படி சிந்தித்தவர்களுக்கு இன்றைய பதிவு. அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
டூட்டி ஃப்ரூட்டி செய்வது எப்படி.?
முதலில் டூட்டி ஃப்ரூட்டி செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பப்பாளிக்காய் – 3
- சர்க்கரை – 500 கிராம்
- தண்ணீர் – தேவையான அளவு
- கேசரி பவுடர் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
- பச்சைநிற ஃபுட் கலர் – 1 டீஸ்பூன்
செய்முறை :
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்திருந்த 3 பப்பாளிக்காய்களின் பச்சை நிற தோலை நீக்கிவிட்டு அதில் உள்ள விதைகளையும் நீக்கி விட்டு அதனை சிறிய சிறிய சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
ஸ்டேப் – 2
பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் பாத்திரத்தை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள பப்பாளிக்காய் துண்டுகளை போட்டு அவை வேகுவதற்கான தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக அவை நன்கு வேக வைக்காமல் பாதியளவு வேக வைத்தால் போதும்.
ஸ்டேப் – 3
பிறகு அதனை இறக்கி அதில் உள்ள தண்ணீரை வடிக்கட்டி பப்பாளிக்காய் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 500 கிராம் சர்க்கரையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் உள்ள சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.
ஸ்டேப் – 4
ஓரளவு கொதித்து ரொம்ப தண்ணீராகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாக சர்க்கரை பாகுபோலவும் இல்லாமல் குலாப்ஜாமூன் போட்டு வைக்கக்கூடிய ஜீரா போல் ஆகியவுடன் அதில் நாம் வேகவைத்திருந்த பப்பாளிக்காய் துண்டுகளை போட்டு 8 – 10 மணிநேரம் அந்த ஜீராவிலே ஊற வைத்துக் கொளுங்கள்.
ஸ்டேப் – 5
பின்னர் ஊறிய அந்த பப்பாளிக்காய் துண்டுகளை எடுத்து மூன்றாக பிரித்து அதில் ஒன்றில் 1 டீஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது பாதியில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மற்றொரு பகுதியில் 1 டீஸ்பூன் பச்சை நிற ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக மூன்று பகுதியையும் ஒன்றாக கலந்து 2 நாட்கள் வெயிலில் காய வைத்து பிறகு அதனை ஒரு காற்றுப்புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது டூட்டி ஃப்ரூட்டி ரெடியாகி விட்டது இந்த டூட்டி ஃப்ரூட்டி ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள்.
ஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |