இட்லி, தோசைக்கு பல சைடிஷ் ட்ரை பண்ணிருப்பீர்கள்.! ஆனால் இந்த மாதிரி ஒரு சைடிஷ் யாரும் ட்ரை பண்ணிருக்கமாட்டீங்க ..!

Advertisement

இட்லி தோசைக்கு சைடிஷ்..!

ஹாய் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது இட்லி, தோசைக்கு மிகவும் புதுமையான மற்றும் மிகவும் அருமையான சைடிஷ்  பற்றி தான். பொதுவாக நாம் இட்லி,தோசைக்கு கார சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் என்று சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு புதுமையான சைடிஸ் செய்து சாப்பிட்டிருக்க மாட்டீர்கள்.

அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சைடிஸை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அதன் பிறகு மீண்டும் மீண்டும் செய்து தருமாறு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். சரி வாங்க இந்த புதுமையான சைடிஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

இட்லி தோசைக்கு புதுமையான சைடிஷ்:

முதலில் இந்த புதுமையான சைடிஸ் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. கத்திரிக்காய் – 2
  2. உருளைக்கிழங்கு – 2
  3. தக்காளி – 1
  4. வெங்காயம் – 1 நன்கு பொடியாக நறுக்கியது 
  5. பச்சைமிளகாய் – 2
  6. எண்ணெய் – 2 டீஸ்பூன் 
  7. கடுகு – 1/2 டீஸ்பூன் 
  8. உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் 
  9. கருவேப்பிலை – தேவையான அளவு 
  10. பெருங்காயதூள்- 1/4 டீஸ்பூன் 
  11. உப்பு – 1 டீஸ்பூன் 
  12. தண்ணீர் – தேவையான அளவு 

செய்முறை :

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 கத்திரிக்காய், 2 உருளைக்கிழங்கு ,1 தக்காளி மற்றும் 2 பச்சைமிளகாய் ஆகியவற்றை இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருந்த கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வேக தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 2-3 விசில் வர வேண்டும்.

ஸ்டேப் – 3

பின்னர் காய்கறி வெந்த பிறகு அதில் உள்ள தண்ணீரை மட்டும்  தனியாக வடிக்கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வேகவைத்த காய்கறிகளை  கரண்டியினால் நன்கு மசித்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

அடுத்து மற்றொரு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, தேவையான அளவு கருவேப்பிலை, நன்கு பொடியாக நறுக்கிய 1 வெங்காயம் மற்றும் 1/4 டீஸ்பூன் பெருங்காயதூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

 idli side dish recipes in tamil

பின்  நன்கு வதங்கிய பிறகு அதில் நாம் வேகவைத்து மசித்து வைத்திருந்த காய்கறிகள், காய்கறிகளை வேகவைத்து வடிக்கட்டி வைத்திருந்த தண்ணீர் மற்றும்  1 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இது நன்கு கொதித்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள்.

நமது புதுமையான சைடிஸ் ரெடியாகிவிட்டது. இந்த சைடிஸை நீங்களும் செய்து பாருங்கள்.

 இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்ற கருவேப்பிலை கார தொக்கு ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil

 

Advertisement