இட்லி மாவில் போண்டா போடுவது எப்படி? – Idli Maavu Ponda Recipe in Tamil
நமது வீட்டில் எப்போதும் இருந்துகொண்டே இருக்க கூடிய ஒரே மாவு இட்லி மாவு ஒன்று மட்டும் தான். இந்த இட்லி மாவை பயன்படுத்தி ஒரு அருமையான ரெசிபி செய்யலாம் அது உங்களுக்கு தெரியுமா? அது வேற ஒன்றும் இல்லை இட்லி மாவில் மொறு மொறுனு சுவையான போண்டா செய்யலாம். இந்த போண்டா செய்ய என்ன பொருள் தேவைப்படும், எப்படி செய்ய வேண்டும் போன்ற விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- புளித்த இட்லி மாவு – 1/2 கப்
- அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்
- ரவை – இரண்டு ஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – 5
- பூண்டு பல் – 3
- சீரகம் – 1 ஸ்பூன்
- கடுகு – 1/2 ஸ்பூன்
- மிளகு – 1/4 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2 பொடிதாக நறுக்கியது
- சின்ன வெங்காயம் – பொடிதாக நறுக்கியது ஒரு கையளவு
- கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
- எண்ணெய் – 1/2 லிட்டர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பீட்ரூட் இருக்கிறதா? உடனே இந்த பீட்ரூட் அல்வா செய்து பாருங்கள்..!
இட்லி மாவில் போண்டா செய்முறை – Idly Mavu Ponda Recipe in Tamil:
ஒரு பவுலில் புளித்த இட்லி மாவை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் அரிசி மாவு இரண்டு ஸ்பூன், ரவை இரண்டு ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
காய்ந்த மிளகாய் 5 எடுத்து அதனை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும், பிறகு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து தோல் நீக்கிய பூண்டு அதனையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிரியதளவு எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும், பின் பொடிதாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம், மிளகு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.
இப்பொழுது கலந்து வைத்துள்ள இட்லி மாவில் அரைத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.
பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறவும்
பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தகவும்.
எண்ணெய் சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக எண்ணியில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான போண்டா தயார்.
இந்த போண்டாவிற்கு தேங்காய் சட்னி அல்லது இட்லி சாம்பார் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முட்டைகோஸ் இருந்தா போதும்.. ரோட்டுக்கடை காளான் நீங்களே செய்யலாம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |