Idly 65 Recipe in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக மீந்துபோன உணவுகளை இப்போது எல்லாம் யாரும் வீணாக கீழே கொட்டுவது இல்லை. அதற்கு நிகராக பலர் அந்த உணவை பயன்படுத்து வித்தியாசமாக சமைத்து அசத்துகின்றன. அந்த வகையில் செய்யக்கூடிய ரெசிபி தான் இட்லி 65. உங்கள் வீட்டில் இட்டிலியை அதிகமாக சுட்டுவிட்டிகள் என்றால் கவலைப்பட வேண்டும். இந்த இட்லிகளை பயன்படுத்தி இட்லி 65 எப்படி செய்யலாம் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சரி வாங்க இட்லி 65 எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- இட்லி – 10
- கடலை மாவு – ஒரு ஸ்பூன்
- தனி மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- உப்பு – முக்கள் ஸ்பூன்
- சீரகம் – அரை ஸ்பூன்
- எண்ணெய் – 100 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
இட்லி 65 செய்முறை – Idly 65 Recipe in Tamil:
ஸ்டேப்: 1
முதலில் 10 இட்லிகளை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
ஸ்டேப்: 2
பின்னர் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
பிறகு தக்காளியை நான்கு துண்டுகளாக அரிந்து கொண்டு, அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 3
பின்னர் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் அரை ஸ்பூன் மிளகாய் தூளை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த கலவையை வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளின் மேல் தூவி விட்டு, நன்றாக பிசறிக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 4
பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, அதில் 100 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிசறி வைத்துள்ள இட்லி துண்டுகளை எண்ணெயில் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும்.
பிறகு மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
ஸ்டேப்: 5
பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு இதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 6
பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதையும் சேர்த்து கொண்டு, இதனுடன் உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
இவை நன்றாக கெட்டியானதும் எண்ணெயில் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து, ஒரு முறை கலந்துவிட்டு பரிமாறினால் போதும், சுவையான இட்லி 65 தயாராகிவிடும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |