ஐயர் வீட்டு சுவையான இட்லி பொடி செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

Iyer Veetu Idli Podi | ஐயர் வீட்டு இட்லி பொடி செய்வது எப்படி

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஐயர் வீட்டு இட்லி பொடி செய்வது எப்படி.? என்பதை (Iyer Veetu Idli Podi) பின்வருமாறு விவரித்துள்ளோம். ஐயர் வீட்டு சமையல் என்றாலே அதில் ஏதோ ஒரு தனி சுவை உள்ளது என்று நிறைய நபர்கள் நினைப்பார்கள். அதனால் எப்படியாவது ஐயர் வீட்டு சமையலில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது ருசியாக செய்ய வேண்டும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கும். அந்த வகையில் முதலாவதாக சுவையான ஐயர் வீட்டு இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அந்த இட்லி பொடியை எப்படி சுவையாக செய்து அசத்துவது என்று பார்க்கலாம்.

இட்லி பொடி தேவையான பொருட்கள்:

சுவையான ஐயர் வீட்டு இட்லி பொடி செய்வதற்கு முதலில் தேவைப்படும் பொருட்கள் பற்றி விரிவாக கீழே கொடுப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  1. உளுந்து- 1/2 கப் 
  2. கடலை பருப்பு- 1/4 கப் 
  3. காய்ந்த மிளகாய்- 15
  4. எள்ளு- 1 ஸ்பூன் 
  5. சீரகம்- 1 ஸ்பூன் 
  6. பூண்டு- 6 பல் 
  7. பெருங்காயம் தூள்- 1/4 ஸ்பூன்
  8. கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு 
  9. உப்பு- தேவையான அளவு
  10. எண்ணெய்- தேவையான அளவு

இதையும் படியுங்கள்⇒ ஐயர் வீட்டு மோர் குழம்பு வீடே மணமணக்க செய்யலாம் வாங்க..!

ஐயர் வீட்டு இட்லி பொடி செய்வது எப்படி.?

ஐயர் வீட்டு இட்லி பொடி செய்வது எப்படி

ஸ்டேப்- 1

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் எடுத்துவைத்துள்ள உளுந்து மற்றும் கடலை பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் வறுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

10 நிமிடம் கழித்த பிறகு கடாயில் உள்ள பொருளுடன் எடுத்துவைத்துள்ள சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக பொன் நிறமாக வரும் வரை வறுத்து கொள்ளவும்.

ஸ்டேப்- 3

இப்போது எடுத்துவைத்துள்ள பெருங்காயம் தூள் மற்றும் பூண்டு இந்த இரண்டையும்கடாயில் உள்ள பொருளுடன் சேர்த்து 2 நிமிடம் மட்டும் வறுத்து கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் உள்ள பொருளை ஆற விடுங்கள்.

ஸ்டேப்- 4 

கடைசியாக ஆற வைத்துள்ள பொருட்களை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்தால் போதும் ஐயர் வீட்டு இட்லி பொடி தயார்.  

இப்போது இந்த இட்லி பொடியை இட்லி, தோசை போன்றவற்றைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள் சுவை நாக்கிலேயே இருக்கும்.

ஐயர் வீட்டு தக்காளி குழம்பு செய்யலாம் வாங்க..

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement