பலாப்பழ பிரியாணி
பலாப்பழம் என்றாலே பலரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்று. பிரியாணியை பிரியர்களுக்கு பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். இவர் இரண்டும் சேர்ந்து ஒரு ரெசிபியாக இருந்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பார்த்தாலே எப்படி இருக்கும் பேரார்வம் இருக்கிறது. உங்களுக்காக பலாப்பழத்தை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
பலாப்பழ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- வெங்காயம்- 2
- தக்காளி -3
- பாசுமதி அரிசி
- பிரியாணி இலை-2
- பட்டை -1
- கிராம்பு -2
- ஏலக்காய் -2
- புதினா – ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
- தயிர் -1/2 கப்
- எலுமிச்சை பழம் -1
- எண்ணெய்-200
- பச்சை மிளகாய்-3
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி
- பிரியாணி மசாலா- 3 தேக்கரண்டி
- நெய்- 50
பலாப்பழ பிரியாணி செய்முறை:

முதலில் பலாப்பழத்தை மேல் உள்ள தோலை சீவி விட்டு உள்பகுதியை கட் செய்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த பலாப்பழமானது பிஞ்சு ஆக இருக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் உப்பு மற்றும் தயிர் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் கட் செய்த பலாப்பழத்தினை எடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் கட் செய்து வைத்துள்ள பலாப்பழத்தை போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். இதனுடைய கலர் கொஞ்சம் மாறியதும் எடுத்து விட வேண்டும்.
அடுத்து பிரியாணி செய்வதற்கு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் சிவந்த நிறம் வந்த பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
பின் இதில் பிரியாணி மசாலா, மிளகாய் தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இவை வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். கல் உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு இதில் பொரித்து வைத்துள்ள பலாப்பழத்தை சேர்த்து வதக்க வேண்டும். இந்த பலாப்பழத்தில் மசாலா சேர வேண்டும். அதன் பொறகு தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒரு கப் பாசுமதி அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கலந்து கோல் வேண்டும். அதன் பிறகு இதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து 3 விசில் விட வேண்டும். அவ்வளவு தாங்க பலாப்பழ பிரியாணி தயார்.
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |














