கடலை மாவு பர்பி செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே..!அடுத்த வாரம் திங்கட்கிழமை தீபாவளி வருகின்றது. அதற்கு துணி, வெடி என்ன வாங்குவதை விட என்ன பலகாரம் செய்வது என்று தான் யோசிப்பீர்கள். அப்படி யோசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதிரசம், ரவா உருண்டை, முறுக்கு இந்த மாதிரி தான் வருடம் வருடம் செய்வீர்கள்.ஆனால் இந்த வருடம் வித்தியாசமாக ட்ரை பண்ணுங்க. இந்த மாதிரி வித்தியாசமாக பலகாரம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் பதிவை தொடர்ந்து பார்வையிடுங்கள். இந்த பதிவில் கடலை மாவு பர்பி செய்வது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ தீபாவளிக்கு இந்த ரவா உருண்டையை செய்திடுங்கள் அதன் சுவையே தனிதான்
கடலை மாவு பர்பி செய்ய தேவையான பொருட்கள்:
- சர்க்கரை – 3/4 கப்
- ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி
- நெய் –1/2 கப்
- கடலை மாவு- ஒரு கப்
- நறுக்கிய பாதாம்- தேவையான அளவு
- குங்மப்பூ – சிறிதளவு
கடலை மாவு பர்பி செய்முறை:
ஸ்டேப்:1
முதலில் அடுப்பை பற்ற வையுங்கள். அதில் ஒரு கடாயை வைத்து 3/4 கப் சர்க்கரை சேர்த்து 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்கள். பின் கையில் ஒட்டுகின்ற பதம் வந்தவுடன் ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து கலக்கவும்.
ஸ்டேப்:2
பின் மற்றொரு கடாயில் 1/2 கப் நெய் சேர்க்கவும். அதில் 1 கப் கடலை மாவை சலித்துவிட்டு சேர்க்கவும். பின் இரண்டையும் கலந்து விடுங்கள். கட்டிபிடிக்காமலும், அடிபிடிக்காமலும் கலந்து விடுங்கள்.
ஸ்டேப்:3
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலந்து விடுங்கள். 10 நிமிடம் கழித்ததும் சர்க்கரை பாகை சேர்க்கவும். பின் நன்றாக கலந்து விடவும் சர்க்கரை பாகு சேர்த்த பிறகு பாத்திரத்தில் அடிபிடிக்காமல் பிரண்டு வரும் நிலை என்று சொல்வார்கள் நிலை வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
ஸ்டேப்:4
பிறகு வேக வைத்த கடலை மாவை மற்றொரு பாத்திரத்தில் வைக்கவும். அதில் மேலே நறுக்கிய பாதாம், சிறிதளவு குங்கும பூ சேர்த்து ஆற வைக்கவும். 1 மணி நேரம் கழித்து உங்களுக்கு விருப்பப்பட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்.
அவ்ளோ தாங்க சுவையான கடலை மாவு பர்பி ரெடி..! எப்பொழுதும் ஒரே மாதிரிரியான பலகாரங்கள் செய்யாமல் இந்த மாதிரி செய்யுங்கள்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |