கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி.?
இட்டலி தோசை என்றாலே சட்னி, சாம்பார் அல்லது பொடி இதில் ஏதவாது ஒன்றுக்கு இருந்தால் தான் சாப்பிட முடியும். அதிலும் தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி போன்ற சட்னிகளை சாப்பிட்டு விட்டு சலித்து போனவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் கடலை பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீர்களா.! இந்த பதிவை படித்து விட்டு கடலை பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கடலை பருப்பு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- கடலை பருப்பு – குழி கெரண்டியால் 1 தேக்கரண்டி
- வெங்காயம் – சின்ன வெங்காயம் 10
- தக்காளி- சிறிய தக்காளி 1
- பட்டை மிளகாய் -3
- பூண்டு- 5 பல்
- கருவேப்பிலை – சிறிதளவு
- தேங்காய் – சிறிதளவு
- எண்ணெய் -2 தேக்கரண்டி
- கடுகு- 1/2 தேக்கரண்டி
- உளுத்தப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
செட்டிநாடு ஸ்பெஷல் காரா சட்னி வெறும் 2 நிமிடத்தில் ருசியாக செய்யலாம் வாங்க..!
சட்னி செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு சேர்த்து வதக்கவும், சிவந்த நிறம் வந்ததும் 3 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருங்கிய பதம் வந்த பிறகு தேங்காய் சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
பின் வதக்கி வைத்த பொருட்கள் எல்லாம் ஆறிய பிறகு மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
எவ்வளவு சட்னி செய்தாலும் இந்த சட்னிக்கு தனி ருசி தான்..!
தாளிப்பதற்கு அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிந்ததும், உளுத்தப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து அரைத்த வைத்த சட்னியுடன் சேர்க்கவும். அவ்ளோ தாங்க கடலை பருப்பு சட்னியை ரெடி.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |