வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆட்டுக்கால் கேக் எப்படி செய்வது? தெளிவான செய்முறை விளக்கம்..!

Updated On: August 8, 2023 12:35 PM
Follow Us:
ஆட்டுக்கால் கேக் செய்வது எப்படி
---Advertisement---
Advertisement

டீக்கடை கஜடா செய்வது எப்படி..! தெளிவான செய்முறை விளக்கம்..!

ஆட்டுக்கால் கேக் எப்படி செய்வது? பொதுவாக நாம் டீ கடைக்கு சென்றால் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு சுவையான தின்பண்டம் கஜடா. இது மாலை நேரங்களில் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ். மிகவும் சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும். இவற்றை நாம் வீட்டிலேயே எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

கஜடா செய்ய தேவையான பொருட்கள்:-

  1. சர்க்கரை – 1/2 கப்
  2. ஏலக்காய் – 3
  3. முட்டை – 1
  4. மைதா மாவு – ஒரு கப் (250 கிராம்)
  5. ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன்
  6. அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
  8. உப்பு – ஒரு சிட்டிகை
  9. நெய் – ஒரு டீ ஸ்பூன்
  10. காய்ச்சிய பால் – இரண்டு டேபிள் ஸ்பூன்
ஈஸியா பப்ஸ் செய்யலாம் வாங்க !!!

ஆட்டுக்கால் கேக் எப்படி செய்வது / கஜடா செய்முறை..!

டீக்கடை கஜடா செய்வது எப்படி (kajada recipe in tamil) /ஆட்டுக்கால் கேக் செய்வது எப்படி? (Attukal cake) தெளிவான செய்முறை விளக்கம்..!

ஆட்டுக்கால் கேக் செய்வது எப்படி? ஸ்டேப்: 1

இந்த கஜடா செய்வதற்கு முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அவற்றில் 1/2 கப் சர்க்கரை மற்றும் மூன்று ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.

பின் அதனுடன் ஒரு முட்டையை உடைத்து திரும்பவும் ஒரு முறை நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

ஆட்டுக்கால் கேக் செய்வது எப்படி? ஸ்டேப்: 2

பின் இன்னொரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு கப் மைதா மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் ரவை, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, உப்பு ஒரு சிட்டிகை, நெய் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இறுதியாக இந்த மாவை பிசைவதற்கு காய்ச்சிய பாலை சிறிதளவு கலந்து நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளவும். அதாவது கையில் உருண்டை உருட்டும் பதத்திற்கு மாவை பிசைய வேண்டும்.

சுவையான மொறு மொறு கட்லெட் செய்முறை..!

ஆட்டுக்கால் கேக் செய்வது எப்படி? ஸ்டேப்: 3

இவ்வாறு மாவை பிசைந்த பின்பு மாவை 20 நிமிடங்கள் நன்கு ஊறவைக்கவும்.

20 நிமிடங்கள் நன்கு ஊறிய பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் உருண்டைகளை பொரித்து எடுக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?

ஆட்டுக்கால் கேக் செய்வது எப்படி? ஸ்டேப்: 4

பிறகு மாவினை எடுத்து சிறு சிறு உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

அவ்வளவு தங்க சுவையான ஆட்டுக்கால் கேக் என்கின்ற டீக்கடை கஜடா தயார் மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.

இந்த பதிவு தங்களுக்கு பிடித்து இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிரவும்… நன்றி வணக்கம்…!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now