தீபாவளி ஸ்பெஷல் சுவையான காஜூ கட்லியை எப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!

Advertisement

காஜு கட்லி செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் தீபாவளி நெருங்கி கொண்டிருப்பதால் அனைவருக்கும் பயனுள்ள ஒரு சுவையான ஸ்வீட் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். நீங்கள் தீபாவளி வந்தால் அதிரசம், ரவை உருண்டை, பயறு உருண்டை, குலோஜாமுன், லட்டு, தேங்காய் பறை, இனிப்பு சீடை இதுபோன்ற இனிப்பு பலகாரங்களை செய்து இருப்பீர்கள். இந்த தீபாவளிக்கு புதிய வகை ரெசிபியா சுவையான காஜு கட்லி வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ சுவையான ஜவ்வரிசி கேசரி செய்வது எப்படி…?

காஜு கட்லி செய்ய தேவையான பொருட்கள்:

  • முந்திரி- 2 கப் 
  • சர்க்கரை- 1 கப் 
  • பால் பவுடர்- 1/2 கப் 
  • நெய்- 1 தேக்கரண்டி 

காஜு கட்லி செய்முறை விளக்கம்:

sweet kaju katli in tamil

ஸ்டேப்- 1

முதலில் காஜு கட்லி செய்வதற்கு தரமான முந்திரியாக இருப்பதை பார்த்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள். தரமான முந்திரியாக இருந்தால் தான் காஜு கட்லி சுவையானதாக இருக்கும். இப்போது ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் பாதியளவு முந்திரியை போட்டு 1 அல்லது 2 சுற்று மட்டும் விட்டு முந்திரியை மிக்சியில் அரைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அரைத்த முந்திரியை ஒரு வடிகட்டி வைத்து தனியாக பாத்திரத்தில் வடிகட்டி விடுங்கள். வடிகட்டிய பிறகு அதில் ஒரு சில முந்திரிகள் இருக்கும் அதை மீதம் இருக்கும் முந்திரியுடன் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு முதலில் அரைத்தது போல் அரைத்து விடுங்கள். அரைத்து முடித்த பிறகு இதையும் வடிகட்டி வைத்து வடிகட்டி விடுங்கள். இப்போது உங்களுக்கு முந்திரி பவுடர் ரெடி ஆகிவிடும்.

ஸ்டேப்- 3

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அரைத்து வைத்துள்ள முந்திரி பவுடர் மற்றும் அதற்கு தேவையான அளவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடுங்கள். சர்க்கரை கொதிக்கும் போது அதில் உங்களின் கைகளில் தொட்டு பார்க்கும் போது கைகளில் ஒட்டி உடனே பிரிந்து விடும். அந்த பதத்திற்கு வரும் வரை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 4

மேலே சொல்லப்பட்ட பதம் வந்தவுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி பவுடரை சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். முக்கால் பதம் வரும் வரை கிண்டி கொண்டே இருங்கள் அப்போது தான் முந்திரி வேகும். அதன் பிறகு 1/2 கப் பால் பவுடரை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். 5 நிமிடம் களித்து இந்த மூன்று பொருட்களும் ஒரு பதத்திற்கு வந்துவிடும்.

ஸ்டேப்- 5

அதன் பிறகு ஒரு பெரிய தட்டில் நெய் சிறிதளவு சேர்த்து தடவி கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் இருக்கும் அந்த மாவை நெய் தடவி இருக்கும் இந்த பாத்திரத்தில் ஊற்றி விடுங்கள். அடுத்ததாக சப்பாத்தி கட்டையில் நெய் தடவி இந்த மாவின் மேல் வைத்து மாவை சம படுத்தி விடுங்கள்.

ஸ்டேப்- 6

கடைசியாக சில்வர் லீவிஸ் எடுத்துக்கொண்டு அதனை மாவின் போட்டு உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி விடுங்கள். அவ்வளவு தான் நீங்கள் எதிர்பார்த்த சுவையான காஜு கட்லி செய்து இந்த தீபாவளியை இனிப்பாக கொண்டாடுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

Advertisement