வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தீபாவளி ஸ்பெஷல் சுவையான காஜூ பிஸ்தா ரோல் செய்வது எப்படி தெரியுமா?

Updated On: October 11, 2025 1:30 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Kaju Pista Roll Seivadhu Eppadi 

தீபாவளி நெருங்கி கொண்டிருப்பதால் அனைவருக்கும் பயனுள்ள ஒரு சுவையான ஸ்வீட் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். இனிப்பு கடைகளில் மிகவும் விலை உயர்ந்த மற்றும் சுவையான  இனிப்பு வைகைகளில் காஜூ பிஸ்தா ரோல் முக்கிய பங்கை வகிக்கிறது. நீங்கள் தீபாவளி வந்தால் அதிரசம், ரவை உருண்டை, பயறு உருண்டை, குலோஜாமுன், லட்டு, தேங்காய் பறை, இனிப்பு சீடை இதுபோன்ற இனிப்பு பலகாரங்களை செய்து இருப்பீர்கள். இந்த தீபாவளிக்கு புதிய வகை ரெசிபியா சுவையான காஜு கட்லி வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க…

காஜூ பிஸ்தா செய்ய தேவையான பொருள்கள்:

  • முந்திரி பருப்பு -1 கப் 
  • சர்க்கரை ½ கப் 
  • தண்ணீர் மற்றும் பால் -¼ கப் 
  • நெய் – 5 தேக்கண்டி 
  • பால் -2தேக்கரண்டி 
  • பிஸ்தா -½ கப் 
  • பொடித்த சர்க்கரை -¼ கப் 
  • ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி 
  • வெள்ளி இலை 

தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி செய்வது எப்படி?

காஜூ பிஸ்தா ரோல் செய்யும் முறை :

டிப்ஸ் :1

முதலில் தரமான முந்திரியை பார்த்து வாங்கி கொள்ளவும். தரமான முந்திரியாக இருந்தால் தான் காஜு கட்லி சுவையானதாக இருக்கும். இப்போது ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் உலர்ந்த முந்திரியை மிக்சியில் போட்டு ஒரு நிமிடம் பொடியாக  அரைத்து கொள்ளவும்.

டிப்ஸ் :2

ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடாக்கி கொள்ளவும். இதை ஒரு கம்பி பதம் வர வரைக்கும் கொதிக்க விடவும்.இதனுடன் பொடித்த முந்திரியை கட்டி ஏற்படாமல் நன்கு கலக்கவும். முதலில் தண்ணீர் பதம் போன பிறகு அடுப்பு தீயை குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும்.

டிப்ஸ் :3

பிறகு முந்திரி கலவை கெட்டியாகி, கடையின் ஓரங்களை  விட்டு வெளியேற தொடங்கும். பிறகு தீயை முழுவதுமாக குறைத்து விட்டு கையில் நெய் தடவி முந்திரிமாவை உருண்டையாக பிடித்து பக்குவமாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முந்திரி மாவை மென்மையாகவும் சூடாகவும் மாற்ற ஒரு கரண்டியால் கலக்கவும். அதில் போதுமான சூடு இருக்கும் போது உங்கள் கைகளில் நெய் தடவி  மாவை போதுமான அளவு பிசைந்து மென்மையாக உருட்ட வேண்டும். பின்பு பிசைந்த முந்திரி மாவை ஒரு உலர்ந்த துணி போட்டு மூடி ஓரமாக வைக்கவும்.

டிப்ஸ் :4

பிறகு பிஸ்தாவை பொடி செய்துவதற்கு பிஸ்தாவை மென்மையாக பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். முந்திரியை அரைத்து போல தேவையான அளவு வரை பிஸ்தாவை பொடி செய்து அரைத்து கொள்ளவும்.

டிப்ஸ் :5

பிஸ்தா பொடியுடன் பொடித்த சர்க்கரை மற்றும் பச்சை உணவு நிறம் மற்றும் ஏலக்காய் எசன்ஸ் போட்டு கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கையில் நெய் தடவி பிசைய வேண்டும். முக்கியமாக பிஸ்தா மாவிற்கு தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது. பிஸ்தா மாவில்  ஓட்டும் தன்மை இருந்தால் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து மிதமான தீயில் வைத்து பிசுபிசுப்பு தன்மை போகும் வரையில் கைவிடாமல் கலக்கவும்.

டிப்ஸ் :6

உங்கள் கைகளில் நெய் தடவி மாவை நன்றாக பிசையவும் பிஸ்தா மற்றும் முந்திரி மாவை தனி தனியாக பிரித்து வைக்கவும் கொள்ளவும்.உங்கள் உள்ளங்கைகளில் வைத்து உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் அல்லது ஒரு பூரி கட்டையில் வைத்து தேய்த்து உருளை வடிவத்தை உருவாக்கவும்.

டிப்ஸ் :7

இப்போது முந்திரி மாவை வெண்ணெய் காகிதத்தில் வைக்கவும். அதை சப்பாத்தி ரோலரால் மெல்லியதாக உருட்டவும். இந்த வட்டத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கொள்ளவும். பிஸ்தா கட்டையில் ஒன்றை நடுவில் வைக்கவும். பிஸ்தா கட்டையின் மாவும் முந்திரி மாவு வட்டமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 

டிப்ஸ் :8

இதை பிஸ்தா கட்டையின் மேலையும் , கீழையும் மடிக்க வேண்டும். பிறகு இது ஒரு கட்டை வடிவமாக மாறிவிடும். இப்போது ரோலை மெதுவாக உருட்டவும்,  நீங்கள் எந்த அளவுக்கு உருட்டுகிறீர்களோ அவ்வளவு நீளமாகவும் சரியான சரியான வடிவத்தையும் கொண்டிருக்கும்.

டிப்ஸ் :9

பின்பு உங்களுக்கு தேவையான அளவிற்கு பிஸ்தா ரோலை துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.இறுதியாக வெள்ளி இலையை பிஸ்தா ரோல் மீது ஓட்ட வேண்டும். இதை ஒரு மணி நேரம் உலர்த்திய பிறகு சுவையை கஜூ பிஸ்தா ரோல் ரெடியாகிவிடும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal



 

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now