தீபாவளிக்கு இந்த மாதிரி ஸ்வீட் செஞ்சி அசத்துங்க..!

Advertisement

Kala Jamun Sweet Recipe in Tamil

வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மிகவும் சுவையான காலா ஜாமுன் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அனைவருக்குமே தீபாவளி போன்ற விஷேச நாட்களில் இனிப்பான பலகாரங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசைகள் இருக்கும். இந்த தீபாவளிக்கு என்ன ஸ்வீட் செய்யலாம் என்று யோசிக்கும் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே ருசியான காலா ஜாமுன் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ 1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் நீங்களும் செய்து அசத்தலாம்

காலா ஜாமுன் செய்வது எப்படி..? 

தேவையான பொருட்கள்:

  1. பால் பவுடர் – 1 கப்
  2. சர்க்கரை – 2 கப்
  3. மைதா – 3 டேபிள் ஸ்பூன்
  4. நெய் – 2 ஸ்பூன்
  5. துருவிய பன்னீர் – 100 கிராம்
  6. இனிப்பில்லாத கோவா- 250 கிராம்
  7. ஏலக்காய் தூள் – தேவையான அளவு
  8. குங்குமப்பூ – தேவையான அளவு
  9. தண்ணீர் -தேவையான அளவு
  10. எண்ணெய் -தேவையான அளவு

காலா ஜாமுன் செய்முறை:

Kala Jamun Sweet Recipe in Tamil

செய்முறை -1

முதலில் ஒரு பாத்திரத்தில் இனிப்பில்லாத கோவா எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் பன்னீர் மற்றும் நெய் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

பின் மைதா மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.

பின்னர் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -2

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் பிசைந்து வைத்துள்ள மாவு உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -3 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பின் அதில் 2 கப் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பின் அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூ சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை -4

பிறகு இந்த சர்க்கரை பாகுவில் நாம் பொறித்து வைத்துள்ள காலா ஜாமுன் உருண்டைகளை போட்டு ஊறவைக்க வேண்டும். சர்க்கரை பாகு நன்றாக மாவு உருண்டைகளுடன் நன்றாக ஊற வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ருசியான காலா ஜாமுன் ரெடி..!  

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement