வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி.? | Karadaiyan Nombu Adai Seivathu Eppadi

Updated On: March 9, 2026 5:42 PM
Follow Us:
Karadaiyan Nombu Adai Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Karadaiyan Nombu Adai Recipe in Tamil | காரடையான் நோன்பு அடை

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி.?  என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. Karadaiyan Nombu பற்றி நம் அனைவருக்குமே தெரியும். குறிப்பாக, பெண்கள் அனைவருக்கும் தெரியும். காரடையான் நோன்பு என்பது, பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக இறைவனை பிராத்தனை செய்யும் முறை ஆகும்.

இந்நாளில் பெண்கள் Karadaiyan Nombu Adai ரெசிபி செய்து வழிப்படுவது வழக்கம். எனவே, அந்த வகையில் புதிதாக காரடையான் நோன்பு இருப்பவர்களுக்கு பயனுள்ள  வகையில் காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி.? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.

How to Make Karadaiyan Nombu Adai in Tamil:

How to Make Karadaiyan Nombu Adai in Tamil

தேவையான பொருட்கள்:

  • வறுத்த பச்சரிசி மாவு – 1 கப்
  • காராமணி – 1/4 கப்
  • தேங்காய் – அரை கப்
  • வெல்லம் – 1 கப்
  • ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் 
  • தண்ணீர்– 2 கப்

செய்முறை விளக்கம்:

  • முதலில் காராமணியை வேகவைத்து அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
  • அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சிறிது சிறிதாக உடைத்து போட்டு கொதிக்க விடுங்கள்.
  • வெல்லம் நன்றாக கொதித்ததும், அதனுடன் வேகவைத்துள்ள காராமணி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து வறுத்து வைத்துள்ள பச்சரிசி மாவினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி விடுங்கள்.

 காரடையான் நோன்பு அடை செய்வது எப்படி

  • பிறகு, மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணெய் தடவி மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைத்து கொள்ளுங்கள்.
  • இறுதியாக, இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான காரடையான் நோன்பு அடை தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?