கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி..? – Karandi Omelette Recipe in Tamil..!
பொதுவாக அனைவரின் வீட்டிலும் இது ஒரு பிரபலமான உணவு ஆகும். பொதுவாக நம் வீட்டில் இதனை ஒரு சைடு டிஷ் போல் எடுத்துக் கொள்வார்கள். சிலர் இதனை தான் காலை உணவாக எடுத்துக் கொள்வார்கள். அப்படி என்ன உணவு என்றால் ஆம்லெட் ஆகும். இது முட்டை வைத்து செய்வது என்று தெரியும். அதேபோல் இதில் நிறைய வகையான டிஷ் செய்து ஆம்லெட், Halfboil, கலக்கி என வித்தியாசமாக செய்து சாப்பிடுவார்கள். அதேபோல் இதனை முன்பு நிறைய வகையில் செய்து சாப்பிட்டது உண்டு.
அதாவது வெங்காயம், மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டிருப்போம். அதேபோல் அதில் ஒன்றும் சேர்க்காமல் இன்னொரு வகையாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இது மாதிரி யார் செய்து சாப்பிட்டது. இதை தான் கரண்டி ஆம்லெட் என்று சொல்வார்கள். இந்த கலக்கி என்பதெல்லாம் இப்போது வந்தது. இதுபோல் கரண்டி ஆம்லெட் முன்பு இருந்தது. ஆனால் இதுபோல் யாரும் வீட்டில் செய்வதும் இல்லை கடையிலும் செய்வதும் இல்லை. சரி நாம் வீட்டில் எப்படி கரண்டி ஆம்லெட் செய்யலாம் என்று பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி?
இதனை நாம் ஒரு கரண்டியில் செய்யப் போகிறோம். இதற்கு தேவையான பொருட்கள் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு, பச்சை மிளகாய் , கொத்தமல்லி, மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு இது அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அந்த கலந்த பொருட்களுடன் 1 முட்டையை சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து உங்கள் வீட்டில் கொஞ்சம் பெரிய அளவில் கரண்டி இருந்தால் அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு அது கொதித்த பின்பு, அதில் நாம் முட்டை கலந்து வைத்துள்ளவற்றை அதில் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
அது ஓரளவு வெந்த பின்பு அதனை மெதுவாக மறுபக்கம் கலந்துவிடவும். இதில் இரண்டு பக்கமும் நன்கு வெந்த பின்பு நீங்கள் அதனை அப்படியே சாப்பிடலாம். இதனை தேவையான பொருட்கள் கீழ் பதிவில் தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு வைப்பது எப்படி
தேவையான பொருட்கள்:
- முட்டை
- வெங்காயம்
- மிளகு தூள்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- கொத்தமல்லி
- பச்சை மிளகாய்
- எண்ணெய்
முட்டை இல்லாமலே ஆம்லெட் செய்ய தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |