ஆந்திரா ஸ்டைல் கருவேப்பிலை பொடி காரசாரமா இப்படி செஞ்சி பாருங்க..!

Advertisement

Karuveppilai Podi Seivathu Eppadi

இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ஆந்திரா ஸ்டைல் கருவேப்பிலை பொடி காரசாரமா செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். என்னதான் இட்லி, தோசைக்கு விதவிதமா சட்னி வைத்து சாப்பிட்டாலும் பொடிக்கு இணை வேறு எதுவும் இல்லை என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே கருவேப்பிலை பொடி காரசாரமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl

கருவேப்பிலை பொடி செய்வது எப்படி..?

Karuveppilai Podi Seivathu Eppadi

தேவையான பொருட்கள்:

  1. துவரம்பருப்பு – 1 கப்
  2. பொட்டுக்கடலை – 3/4 கப்
  3. காய்ந்த மிளகாய் – 20
  4. மிளகு – 1 ஸ்பூன்
  5. சீரகம் – 1 ஸ்பூன்
  6. கருவேப்பிலை – 3 கைப்பிடி அளவு
  7. பெருங்காயம் – சிறிதளவு
  8. புளி – தேவையான அளவு
  9. எண்ணெய் – 1 ஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி இப்படி செஞ்சிப்பாருங்க..!

கருவேப்பிலை பொடி செய்முறை:

கருவேப்பிலை பொடி செய்முறை

ஸ்டேப் -1

ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். கடாய் சூடானதும் அதில் முதலில் துவரம் பருப்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

அதுபோல கருவேப்பிலையையும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

அடுத்து இருக்கும் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் இவற்றையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4

பின் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் புளி மற்றும் பெருங்காயத்தை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -5

பிறகு நாம் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆற விடவேண்டும். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் நண்பர்களே..! இட்லி, தோசைக்கு ஏற்ற காரசாரமான கருவேப்பிலை பொடி தயார்..! இந்த கறிவேப்பிலை பொடியை நீங்கள் இட்லி, தோசை மட்டுமில்லாமல் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். இந்த பொடியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிடுங்கள்..!

ஸ்கூல் போகும் பிள்ளைகளுக்கு பருப்பு பொடி சாதத்தை செய்துகொடுங்கள்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement