மாலை நேரங்களில் சூடான கீரை போண்டா செய்தால்..! இப்படி செய்து பாருங்கள் சும்மா டேஸ்ட் சூப்பரா இருக்கும்

keerai bonda seivathu eppadi in tamil

ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?

அனைவருக்கும் அன்பான வணக்கம் தினமும் மாலை நேரங்களில் என்ன செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துவது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் இந்த பதிவானது உதவியாக இருக்கும். மாலை நேரங்களில் உணவுகள் செய்தால் அது அந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் இருக்காது ஏனென்றால் மாலை நேரங்களில் அடிக்கடி விரும்புவது எண்ணெய் பலகாரங்களை மட்டுமே ஆகவே அதற்கு ஏற்றது போல் அனைவருக்கும் பிடித்தது போல் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம் வாங்க..!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்,

பச்சரிசி மாவு – 1/4 கப்,

சோம்பு – 1/2 ஸ்பூன்,

மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்,

பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்,

தேவையான அளவு உப்பு,

கறிவேப்பிலை கொத்தமல்லி தழை  1 கைப்பிடி அளவு,

பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது.

கீரை – ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் – 2 நைசாக

கடலை மாவு 250 கிராம் அளவு

அரிசி மாவு  – 1/4 கப்

கீரை போண்டா செய்வது எப்படி?

ஸ்டேப் -1

முதலில் போண்டா போடுவதற்கு ஒரு கடாயில்  எண்ணையை ஊற்றி சூடாக வைக்கவேண்டும்.

ஸ்டேப் -2

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவையும் அரிசி மாவையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். அதன் பின்பு சோம்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒருமுறை வெங்காயத்துடன் மாவு ஒட்டும் படி உங்கள் விரல்களால் நன்றாக கலந்து கொடுங்கள்.

ஸ்டேப் -3

அடுத்து சூடாக இருக்கும் எண்ணையில் அரைக்கரண்டி ஊற்றி மாவை நன்றாக பிசைந்துகொள்ளவும்.

ஸ்டேப் -4

பின்பு நறுக்கி வைத்திருந்த கருவேப்பிலை கொத்தமல்லித் தழையையும், பச்சை மிளகாயையும், கீரையையும் பிசைந்துகொண்டிருக்கும் மாவோடு சேர்த்து கலந்துகொள்ளவும்.

ஸ்டேப் -5

இறுதியாக சப்பாத்திமாவு சிறிது தண்ணியாக இருத்தால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவிற்கு பிசைந்து பின்பு அதில் உருண்டையாக பிடித்து கடாயில் சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு எடுத்து மாலை நேரங்களில் சாப்பிடால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Samayal kurippu tamil