அசைவ சமையல் செய்முறை
சுவையான சமையல் முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை (Kothu Chapathi)..!
முட்டை கொத்து பரோட்டா என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த முட்டை கொத்து பரோட்டாவை போலவே வித்தியாசமாக முட்டை கொத்து சப்பாத்தி (Kothu Chapathi) செய்து சாப்பிட்டால் எவ்வளவு சுவையாக இருக்கும்.
சரி வாங்க சுவையான சமையல் முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை (Kothu Chapathi) பற்றி இந்த பகுதியில் நாம் தெளிவாக படித்தறிவோம் வாங்க…
உங்கள் சப்பாத்தி பஞ்சி போல சாஃப்டா உப்பி வர இப்படி try பண்ணுங்க..! |
முட்டை கொத்து சப்பாத்தி – தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – தேவையான அளவு.
- இலவங்கப்பட்டை – இரண்டு.
- கிராம்பு – இரண்டு.
- ஏலக்காய் – ஒன்று.
- பொடிதாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று.
- பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டு – 1/4 தேக்கரண்டி.
- தக்காளி பொடிதாக நறுக்கியது -இரண்டு.
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி.
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி.
- உப்பு – தேவையான அளவு.
- முட்டை – ஐந்து.
- பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடியளவு.
- மிளகு – தேவையான அளவு.
- சப்பாத்தி.
- நெய் – இரண்டு தேக்கரண்டி.
அசைவ சமையல் செய்முறை..!
முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை ஸ்டேப்: 1
முட்டை கொத்து சப்பாத்தி செய்வதற்கு முதலில், சப்பாத்தியை ரோல் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் இரண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை ஸ்டேப்: 2
பின்பு பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொடிதாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.
முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை ஸ்டேப்: 3
இந்த கலவையை 5 நிமிடங்கள் நன்றாக வதக்கிய பிறகு 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
மசாலா நன்றாக வதங்கியதும் ஐந்து முட்டைகளை இந்த மசாலாவில் உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விடவும். முட்டை வெந்து கொண்டிருக்கும் போது பொடிதாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கவும்.
முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை ஸ்டேப்: 4
முட்டையானது 1/2 வேக்காடு வெந்ததும் நறுக்கி வைத்துள்ள சப்பாத்தியை இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை ஸ்டேப்: 5
முட்டையானது நன்றாக வெந்ததும் இறுதியாக மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வளவுதான் சுவையான முட்டை கொத்து சப்பாத்தி செய்துவிட்டோம்.
இந்த சுவையான முட்டை சப்பாத்தி செய்முறை செய்து வீட்டில் அசத்துங்கள்.
ஹோட்டல் தோசை போல மொறு மொறுன்னு வேண்டுமா அப்ப இதை செய்ங்க |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!! |