கொழுக்கட்டை | Kolukattai Recipe
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நாம் இந்த பதில் பார்க்க போகிறது என்னவென்றால் ஒரு சூப்பரான டிஷ், ஆன்மீக டிஷ் எனவும் சொல்லலாம். அதன் பெயர் செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை. இது பொதுவாக ஆடி மாதத்தில் செய்து சாப்பிடுவார்கள், இதை செய்வது மிகவும் ஈசியாக இருக்கும். ஒரு 20 நிமிடத்தில் செய்து விடலாம். இதனை செய்யும் பொழுது பக்தியுடன் செய்வார்கள். இதை உப்பு சேர்க்காமல் செய்வார்கள். வாங்க செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- தேங்காய் துருவல்.
- வெல்லம்
- நெய்
கொழுக்கட்டை செய்முறை:
ஸ்டேப்: 1
- முதலில் கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதனுடன் வெல்லத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெல்லமானது தேங்காயுடன் சேர்ந்து தளதளவென்று வரும். அப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்வளவு தான் பூரணம் தயார்.
ஸ்டேப்: 2
- அடுத்து மாவு செய்வதற்கு பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும்,. இதில் சூடான வெந்நீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மாவில் விரிசல் வராத அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். மாவை உருண்டை வடிவத்தில் பிசைந்து மேலே நெய் தடவி கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 3
- 5 நிமிடம் கழித்து பிசைந்து வைத்துள்ள மாவில் உள்ளங்கையில் வைத்து தட்டி கொள்ள வேண்டும். பிறகு பூரணத்தை நடுவில் வைத்து உங்களுக்கு எந்த வடிவில் வேண்டுமோ அந்த அளவிற்கு பிடித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
- இது போல நீங்கள் பிடித்து வைத்துள்ள மாவை அனைத்தயும் இட்லி பானையில் வைத்து 10 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.
- அவ்வளவு தான் கொழுக்கட்டை ரெடி!
நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |














