குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேக்குறாங்களா? பத்தே நிமிடத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குழிப்பணியாரம் ரெடி !!!

kuli paniyaram recipe in tamil

Kuli Paniyaram Recipe in Tamil

ஸ்னாக்ஸ் கேட்டு தான் குழந்தைகள் அதிகம் அடம் பிடிக்கின்றன. குழந்தைகள் ஸ்னாக்ஸ் தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. இன்னும் சொல்ல போனால் குழந்தைகளின் உணவே ஸ்னாக்ஸ் என்று கூட சொல்லலாம். குழந்தைகள் பொதுவாக பார்க்கின்ற அனைத்தையும் கேட்டு அடம் செய்வார்கள். கடைகளில் கிடைக்கும் லேஸ், குர்குரே, சாக்லேட் போன்ற கெமிக்கல் கலந்த பொருள்களை வாங்கி தராதீர்கள்.

ஆரோக்கியமான பொருள்களை பயன்படுத்தி உங்க வீட்டிலேயே உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸை செய்து கொடுத்து உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பதிவில் பார்க்க இருப்பது 10 நிமிடத்தில் குழிப்பணியாரம் எப்படி செய்வது என்பது பற்றி தான். குழிப்பணியார செய்முறை பின்வருமாறு தெரிந்துகொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் செய்து கொடுங்கள்.

 குழிப்பணியாரம் செய்ய தேவையான பொருட்கள் :

  • வாழைப்பழம் – 2
  • நாட்டு சர்க்கரை 1/2 கப் அல்லது வெல்லம் 1/2 கப்
  • உப்பு – 1/4 டீஸ்பூன்
  • ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கோதுமை மாவு – 1 கப்
  • அரிசி மாவு – 1/4 கப்

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

ஸ்டேப் 1:

kuli paniyaram ingredients in tamil

முதலில் வாழைப் பழத்தினை தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு நாம் எடுத்து வைத்துள்ள பொருள்களான தோல் உரித்த வாழைப்பழம், நாட்டு சர்க்கரை ஏலக்காய்த் தூள், கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் தேவைக்கேற்ப உப்பு போன்றவற்றை மிக்சியில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பத்தே நிமிஷத்தில் ஈஸியான முட்டை பணியாரம்!!!

ஸ்டேப் 2:

அரைத்து எடுத்துக்கொண்ட மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப் 3:

kuli paniyaram seivathu eppadi tamil

பிறகு குழி பணியார கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்ற வேண்டும்.

ஸ்டேப் 4:

inippu kuli paniyaram seivathu eppadi

பின் எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்து வைத்துள்ள மாவினை பணியார குழிகளில் ஊற்றவும். பிறகு 2 நிமிடங்கள் மூடி வேக வைக்க வேண்டும். பின் திறந்து பணியாரங்களை திருப்பி போட்டு இரண்டு பக்கங்களும் நன்றாக மொறுமொறுவென்று இருக்கும் பதத்தில் நன்கு வேக வைத்து பணியாரங்களை எடுக்க வேண்டும்.

இட்லி மாவில் பணியாரம் செய்வது எப்படி?

kuzhi paniyaram seivathu eppadi

இப்போது  சூடாக  பணியாரம் ரெடி. குழந்தைகளுக்கு உண்ண கொடுத்து மகிழுங்கள் நன்றி🙏.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்