வெயிலுக்கு உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கொடுக்கும் குலுக்கி சர்பத் செய்முறை

Kulukki Sarbath Recipe in Tamil

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் செய்முறை | Kulukki Sarbath Recipe in Tamil

Kulukki Sarbath Recipe in Tamil:- வெயில் காலம் வந்து விட்டது என்றாலே பெரும்பாலானோர் கடைகளுக்கு சென்று 5 ரூபாய் மதிப்புள்ள சர்ப்பத்தை 50 ரூபாய் கொடுத்து குடிப்போம். அந்த வரிசையில் எல்லா கடைகளிலும் கிடைக்கும் குலுக்கி சர்பத்தை மிக மிக சுலபமான முறையில் நம் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கேரளாவில் கோழிக்கோடு, எர்ணாக்குளம், கொச்சி போன்ற பகுதிகளில் கிடைக்கும் ஓர் பிரபலமான ஜூஸ். இந்த பானம் கோடைக்காலத்திற்கு ஏற்ற ஓர் அற்புத பானம்.

உங்களுக்கு இந்த குலுக்கி சர்பத் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் இங்கு குலுக்கி சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குலுக்கி சர்பத் செய்ய தேவையான பொருட்களை:

  1. சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன்
  2. எலுமிச்சை பழம் – 2
  3. பச்சை மிளகாய் – 2
  4. புதினா இலைகள் – 10 லிருந்து 15
  5. உப்பு – 2 சிட்டிகை
  6. சர்க்கரை – 2 ஸ்பூன்
  7. ஐஸ் கட்டிகள் தேவையான அளவு

குலுக்கி சர்பத் செய்முறை – Kulukki Sarbath Recipe in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டு, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 10 லிருந்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 2

பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

எலுமிச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது 1 எலுமிச்சம் பழத்தை 8 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

இப்போது இதை எல்லாம் போட்டு கலக்குவதற்கு, அதாவது மூடி போட்டு குலுக்குவதற்கு ஒரு ஜக்கை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 5

தயாராக இருக்கும் ஜக்கில் 2 கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்திருக்கும் சப்ஜா விதை, வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், எலுமிச்சை பழம், புதினா, எடுத்து வைத்திருக்கும் உப்பு, சர்க்கரை எல்லாப் பொருட்களையும் ஒன்றாக போட வேண்டும். 1/2 எலுமிச்சம் பழ சாறை இதில் பிழிந்து விடுங்கள்.

ஸ்டேப்: 6

இறுதியாக தேவையான அளவு ஐஸ் கியூப் போட்டுக்கொள்ளுங்கள். ஜாக்கின் மேலே மூடி போட்டு விட்டு, நன்றாக குலுக்க வேண்டும். அதாவது சர்க்கரை கரையும் வரை குலுக்க வேண்டும். அதன் பின்பு இதை வடிகட்ட கூடாது. அப்படியே கிளாஸில் ஊற்றி குடித்து பாருங்கள். வெயிலுக்கு உப்பு காரம் சர்க்கரை எல்லாம் சேர்ந்த ஜில்லுனு குலுக்கி சர்பத் ரெடி!

 

வீட்டிலேயே பலூடா செய்வது எப்படி ???

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்