வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எலுமிச்சை ஜூஸ் 3 விதமாக சுவையா இப்படி செய்யுங்க

Updated On: April 22, 2023 3:40 AM
Follow Us:
Lemon Juice recipe in tamil
---Advertisement---
Advertisement

Lemon Juice recipe in tamil

அடிக்கிற வெயிலுக்கு சும்மா குளுகுளுன்னு ஒரு ஜூஸ் குடிக்கணும்னு போல இருக்கா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. ஆமாங்க பிரண்ட்ஸ் ஒரு அருமையான ஜூஸ் தயார் செய்யும் முறை பற்றி இப்பொழுது பார்க்கலாம். அதுவும் வெறும் எலுமிச்சை பழம் ஒன்று இருந்தால் போதும். எலுமிச்சை என்றவுடன் எலுமிச்சை பழம் ஜூஸ் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். எலுமிச்சை பழத்தில் நாம் மூன்று விதமான ஜூஸ் தயார் செய்யும் முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம் சரி வாங்க அது எப்படி செய்யலாம் என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று படித்தறியலாம்.

எலுமிச்சை ஜூஸ் 3 விதமாக சுவையா இப்படி செய்யுங்கLemon Juice recipe in tamil

No: 1

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை சாறு – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • குளிர்ச்சியான நீர் – ஒரு கிளாஸ்
  • சர்க்கரை – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • ஊறவைத்த சப்ஜா விதை – 1½ ஸ்பூன்

எலுமிச்சை பழம் ஜூஸ் செய்முறை – Lemon Juice recipe in tamil:

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் தண்ணீர் ஒரு கிளாஸ், எலுமிச்சை சாறு இரண்டு டேபிள் ஸ்பூன், சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை மற்றும் ஊறவைத்த சப்ஜா விதை 1½ ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் ஒரு முறை அடித்து எடுத்தால் போதும் சுவையான சப்ஜா எலுமிச்சை பழம் ஜூஸ் தயார். இந்த ஜூஸை போட்டு குடிப்பதன் மூலம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தர்பூசணி தோலில் அல்வா செய்வது எப்படி ..!

No: 2

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை சாறு – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • குளிர்ச்சியான நீர் – ஒரு கிளாஸ்
  • நாட்டு சர்க்கரை – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • ஊறவைத்த சப்ஜா விதை – 1½ ஸ்பூன்
  • புதினா – 10 இலைகள்

லெமன் ஜூஸ் செய்முறை:

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் தண்ணீர் ஒரு கிளாஸ், எலுமிச்சை சாறு இரண்டு டேபிள் ஸ்பூன், நாட்டு சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை மற்றும் புதினா 10 இலைகள் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் ஒரு முறை அடித்து எடுத்தால் போதும் சுவையான புதினா நாட்டு சக்கரை சேர்த்த எலுமிச்சை பழம் ஜூஸ் தயார். வெயிலில் வெளியில் சென்று வந்தவுடன் இந்த ஜூஸை போட்டு குடிப்பதன் மூலம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை தரும்.

தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை சாறு – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • குளிர்ச்சியான நீர் – ஒரு கிளாஸ்
  • சர்க்கரை – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • உப்பு – ஒரு சிட்டிகை

லெமன் ஜூஸ் செய்முறை – Lemon Juice recipe in tamil:

நாம் எப்பொழுது செய்யும் எலுமிச்சை பழம் ஜூஸ் தான் இது ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் தண்ணீர் ஒரு கிளாஸ், எலுமிச்சை சாறு இரண்டு டேபிள் ஸ்பூன், சர்க்கரை இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் ஒரு முறை அடித்து எடுத்தால் போதும் சுவையான எலுமிச்சை பழம் ஜூஸ் தயார். உடலுக்கு அதிக புத்துணர்ச்சியை அளிக்கும் இந்த மூன்று ஜூஸில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Chicken Dum Biryani in Tamil

ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil