எலுமிச்சை ரசத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ?

Advertisement

எலுமிச்சை ரசம் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் சுவையான மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய எலுமிச்சை ரசம் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே ரசம் என்றாலே சிலர் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ரசத்தில் அதிகம் மிளகு, சீரகம் சேர்ப்பதால் செரிமான கோளாறுகளை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் அதிகமான குமட்டல் வாந்தி ஏற்படும் பொழுது எது சாப்பிட்டாலும் உடனே குமட்டல் வந்துவிடும், இது போன்ற பிரச்சனைகளுக்கு எலுமிச்சை ரசம் சாப்பிடுவது நல்லது. மேலும் எலுமிச்சை ரசத்தை எளிமையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

கொள்ளு சாதம் & கொள்ளு ரசம் வைப்பது எப்படி?

 

எலுமிச்சை ரசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • எண்ணெய்- தேவையான அளவு 
  • கடுகு – சிறிதளவு
  • கருவேப்பிலை 
  • தக்காளி -2
  • எலுமிச்சை -2
  • சீரகம் -1 ஸ்பூன் 
  • மிளகு -1 ஸ்பூன் 
  • கொத்தமல்லி – தேவையான அளவு 
  • உப்பு – தேவையான அளவு
  • பூண்டு-5 பல் 
  • வர மிளகாய்- 2
  • மல்லி -1 ஸ்பூன் 

எலுமிச்சை ரசம் செய்முறை:

டிப்ஸ்:1

முதலில் நாம் எடுத்து வைத்த மிளகு, மல்லி, சீரகம், வரமிளகாய் போன்றவற்றை மிக்ஸியில் நன்றக அரைத்து கொள்ளவேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்த மிளகு, மல்லி, சீரகம், வரமிளகாய் போன்றவற்றியில் பூண்டு பல்களை சேர்த்து மறுபடியும் அரைத்துக்கொள்ள வேண்டும்.

டிப்ஸ்:2

அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் 2 தக்காளிகளை எடுத்து அதனை கழுவிய பின்பு ஒரு கிண்ணத்தில் கையால் பிழிந்து விட வேண்டும். அதன் பிறகு அரைத்த வைத்த  மிளகு, மல்லி, சீரகம், வரமிளகாய் மசாலா மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அந்த கிண்ணத்தில் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

டிப்ஸ்:3

கலந்து வைத்த  கிண்ணத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சையை கட் செய்து சாறு பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறை கடைசியாக தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

டிப்ஸ்:4

ரசத்திற்கு தேவையான பொருட்களை ரெடி செய்த பிறகு, ஒரு கடாயை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்த பின்பு அதில் கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.

டிப்ஸ்:5

அடுத்ததாக கிண்ணத்தில் ரெடி செய்து வைத்த  கலவையை கடாயில் சேர்க்க வேண்டும். ரசத்தை கொதிக்கவிடாமல் 2 நிமிடம் ஆனதும் அடுப்பை அனைத்து விட்டு அதில் எலுமிச்சை சேர்த்து  கலந்து விட வேண்டும். சிலர்க்கு அதிகம் புளிப்பு சேர்ப்பது பிடிக்காது என்றால் உங்களுக்கு தேவையான அளவு எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளுங்கள். எலுமிச்சை சாறை கலந்த பின்பு 10 நிமிடம் கழித்து சுவையான ரசத்தை சாப்பிடுங்கள்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு
Advertisement