வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பார்த்தவுடன் நாக்கில் எச்சு ஊறும் மதுரை ஜிகர்தண்டா ரெசிபி.!

Updated On: July 20, 2023 10:32 AM
Follow Us:
how to make madurai jigarthanda in tamil
---Advertisement---
Advertisement

Madurai Famous Jigarthanda Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே. ஜிகர்தண்டா என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குளிர்பானம். அதிலும் மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவர். ஆனால் இதனை குடிப்பதற்கு ஒவ்வொரு முறையும் மதுரைக்கா செல்ல முடியும். எனவே, மதுரை ஜிகர்தண்டா வீட்டிலே செய்வது எப்படி என்பதை தான் இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துளோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How To Make Madurai Jigarthanda in Tamil:

 madurai jigarthanda recipe in tamil

முதல் நாள் இரவே 3 பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள். இது மறுநாள் கலியில் நன்றாக ஊறி ஒரு ஜெல் பதத்திற்கு இருக்கும்.

அடுத்தாக, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 100 கிராம் சர்க்கரையை சேர்த்து கொள்ளுங்கள். சர்க்கரை பாகு நன்றாக கொதித்து வரும் நிலையில் இதில் சூடான தண்ணீர் 1 கப் சேர்த்து நன்றாக கலந்து  விட்டு இறக்கி கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பால் நன்றாக கொத்தித்து பாதியளவிற்கு வந்ததும் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து நன்றாக காய விடுங்கள். இந்நிலையில் பாலை காந்த விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

பால் காய்ந்து க்ரீம் பதத்திற்கு வந்ததும் இறக்கி விடுங்கள். அடுத்தாக மீண்டும் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1/2 லிட்டர் பாலினை சேர்த்து கொள்ளுங்கள்.

பார்த்தவுடன் இன்னொரு முறை சாப்பிட தோணும் மதுரை கறி தோசை செய்ய தெரியுமா..?

பால் காய்ந்ததும் அதில் தயாரித்து வைத்த சர்க்கரை பாகினை சேர்த்து கிளறி விடுங்கள்.அடுத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து கலந்து இறக்கி கொள்ளுங்கள்.

பிறகு, இதனை பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு கண்ணாடி டம்ளரில் ஊறவைத்த பாதாம் பிசின் 3 ஸ்பூன், 2 ஸ்பூன் நன்னாரி சர்பத், தயார் செய்து வைத்துள்ள பால் ஆடை மற்றும் பிரிட்ஜில் வைத்துள்ள பால் சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது இறுதியாக இதில் வெண்ணிலா ஐஸ்க்ரீம் 2 ஸ்பூன் மற்றும் சர்க்கரை பாகு 2 ஸ்பூன் சேர்த்தால் மதுரை ஜிகர்தண்டா ரெடி.!

தேங்காய், தக்காளி சேர்க்காத மதுரை நீர் சட்னி செஞ்சி பாருங்க..! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now