Madurai Kari Dosai Recipe in Tamil
பொதுவாக இட்லி பிடிக்காத நபர்கள் என்று சில இருப்பார்கள். ஆனால் தோசை எனக்கு பிடிக்காது என்று கூறக்கூடிய ஒரு நபர்கள் கூட இருக்க மாட்டார்கள். ஏனென்றால் தோசை என்பது நாம் அனைவரும் எப்போதும் கொஞ்சம் கூட சலித்து போகாமல் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக உள்ளது. அதிலும் தோசையில் ரவா தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை மற்றும் மைதா தோசை என பல வகைகள் இருப்பதால் அனைத்து வகையான தோசை ரெபிசியினையும் டேஸ்ட் செய்து பார்த்து இருப்போம். அந்த வகையில் இன்று மதுரைக்கு மல்லிகைப்பூற்கு அடுத்த படியாக பெயர்போன கறி தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl |
மதுரை ஸ்பெஷல் கறி தோசை:
இப்போது நாம் மதுரை காரி தோசை செய்ய வேண்டும் என்றால் அதற்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது. அதற்கான பட்டியல் இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- மட்டன் கொத்து கறி – 200 கிராம்
- தோசை மாவு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- மல்லித்தூள்- 3/4 ஸ்பூன்
- மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்
- முட்டை- 2
- சோம்பு- 1/4 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 2
- வெங்காயம்- 2
- தக்காளி- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கறிவேப்பிலை- தேவையான அளவு
இனி வீட்டிலேயே சிக்கன் சவர்மா செய்யலாம் |
கறி தோசை செய்வது எப்படி..?
முதலில் வாங்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி மற்றும் மட்டன் கொத்து கறியினை சுத்தமாக தண்ணீரில் அலசி நறுக்கி தனித்தனியாக வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் எடுத்துவைத்துள்ள சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியினை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்து பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள்தூள் மற்றும் மல்லி தூளினை அதனுடன் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
சிறிது நேரம் கழித்த பிறகு கடாயில் அலசி வைத்துள்ள மட்டன் கொத்து கறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
2 நிமிடம் கழித்து கடாயில் உள்ள மட்டன் கொத்து கறியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு வேகா விடுங்கள். மட்டன் நன்றாக வெந்து மசாலா அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்த பிறகு அடுப்பில் இருந்த மட்டனை கீமாவை இறக்கி பவுலிற்கு மாற்றி வைத்து விடுங்கள்.
இப்போது பவுலில் உள்ள மட்டன் மேலே 2 முட்டையினை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் தோசை ஊற்றி தோசை வெந்த பிறகு அதன் மேலே செய்து வைத்துள்ள கீமாவை வைத்து பரப்பி விடுங்கள்.
கடைசியாக கீமாவின் மேலே வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பின்பு எடுத்து சாப்பிட வேண்டியது தான். இப்படி தாங்க மதுரை ஸ்பெஷல் கறி தோசை செய்யணும்.
மீந்து போன சப்பாத்தியில் நூடுல்ஸ் செய்யலாம் வாங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |