மதுரை பரோட்டா சால்னா செய்வது எப்படி.?

Advertisement

Madurai Parotta Chalna Recipe

பரோட்டா என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா.! வீட்டில் போடும் பரோட்டாவை விட கடையில் சாப்பிடும் பரோட்டா அப்படி இருக்கும். பரோட்டாவை பிச்சு போட்டு அதில் மேலே சால்னாவை ஊற்றி சாப்பிடும் ருசியே தனி! சொல்லும் போதே நாவில் ஏச்சு ஊறுகின்றதா.! இந்த பதிவில் மதுரை ஸ்டைல் சால்னா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

மதுரை சால்னா செய்ய தேவையான பொருட்கள்:

 • மட்டன்- 1/4 கிலோ
 • வெங்காயம்-4
 • தக்காளி- 1
 • மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய்- 1/2 தேக்கரண்டி
 • சோம்பு தூள்- 1/2 தேக்கரண்டி
 • சீரக தூள் –1/2 தேக்கரண்டி
 •   மிளகு தூள் –1/2 தேக்கரண்டி
 •  பட்டை , கிராம்பு, ஏலக்காய்-சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
 • கடலை எண்ணெய்- 400 மில்லி லிட்டர்

மதுரை பரோட்டா சால்னா  செய்முறை: 

மதுரை பரோட்டா சால்னா  செய்முறை

முதலில் கடாய் வைத்து அதில் கடலை எண்ணெய் 400 மில்லி லிட்டர் ஊற்றவும், அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், பட்டை, கல்பாசி, பட்டை கிராம்பு ஏலக்காய் மூன்றையும் இடித்து சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

இனி வீட்டிலேயே சிக்கன் சவர்மா செய்யலாம் 

 

பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின் இதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனுடன் மட்டன், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

மட்டன் சுருங்கிய பதம் வந்தவுடன் மஞ்சள் தூள், சீராக தூள், சோம்பு தூள், மிளகு தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். மசாலாவில் பச்சை வாசனை நீங்கிய பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்கின்ற இடைவெளியில் தேங்காய், பொட்டுக்கடலை, நிலக்கடலை சேர்த்து அரைத்து கொள்ளவும். கொதிக்கின்ற மட்டனில் அரைத்து வைத்துள்ள தேங்காய், தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்த நிலை வரும் போது சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விட வேண்டும். இந்த சால்னாவை பரோட்டாவில் சேர்த்து சாப்பிட்டு பாருங்க..

  மீந்து போன சப்பாத்தியில் நூடுல்ஸ் செய்யலாம் வாங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement