Madurai Special Neer Satni Recipe in Tamil
ஹலோ நண்பர்களே..! பெரும்பாலும் நம் அனைவரின் வீட்டிலும் காலை உணவு இட்லி, தோசையாக தான் இருக்கும். அப்படி தினமும் இட்லி தோசை சாப்பிடு அனைவருக்குமே அலுத்து போயிருக்கும். இருந்தாலும் ஒரு நாள் இட்லி ஒரு நாள் தோசை என்று சாப்பிட்டு சமாளித்து கொள்ளலாம். ஆனால் தினமும் இட்லி தோசைக்கு ஒரே சட்னியாக இருந்தால் என்ன செய்வது வாழ்க்கையே வெறுத்து போய்விடும் அல்லவா..! அதற்காக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தினமும் விதவிதமான சட்னி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக இன்று தேங்காய், தக்காளி சேர்க்காத மதுரை நீர் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
நீர் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் – 6
- பெரிய வெங்காயம் – 3
- பொட்டுக்கடலை – 1/4 கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
கடாயை அடுப்பில் வைக்கவும்:
பின் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய் 6 அல்லது உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.
இனிமேல் ஆரஞ்சு பழத்தோலை தூக்கியெறியாமல் இந்த ரெசிபியை ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள் |
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் வதக்கிய பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1/4 கப் அளவிற்கு பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். ரொம்ப நைசாக அரைக்க வேண்டாம். பின் அதில் போதுமான அளவு அதாவது 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
தாளிக்க வேண்டும்:
பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பின் அதில் கடுகு, கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து சிறிதளவு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிய பின் நாம் அரைத்து வைத்துள்ள சட்னியை இதில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் சட்னி ரெடி..! இந்த சட்னியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்..! இன்னும் 2 இட்லி வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |