Makhana For Weight Loss Recipe in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தாமரை விதை (makhana) மூலம் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை கொடுத்துள்ளோம். தாமரை விதை என்று அழைக்கப்படும் மக்கானாவில் குறைந்த அளவே கலோரி உள்ளது. மக்கானா கொழுப்பின் அளவை உறுதிப்படுத்தவும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, நீங்கள் உங்கள் எடையை குறைக்க விரும்பினால் மக்கானவை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு அதன் பிறகு உட்கொள்வது நல்லது. உடல் எடையை குறைபவர்கள் மக்கானாவில் சாட், கறி, மசாலா, கீர் போன்றவை செய்து சாப்பிடலாம்.
How to Take Makhana for Weight Loss in Tamil:
ரெசிபி – 1
நான்-ஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், 1 கப் மக்கானாவை சேர்த்து அதனுடன் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்து கொள்ளுங்கள்.
வறுத்த மக்கானாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு 1, நறுக்கிய வெங்காயம் சிறியளவு, நறுக்கிய தக்காளி சிறிதளவு, 2 டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, உப்பு, மிளகு, மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை எளிதில் குறையும். இதனை மக்கானா சாட் என்று கூறுவார்கள்.
ரெசிபி – 2
ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து, 1 கப் அளவிற்கு மக்கானாவை சேர்த்து வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, 2 கப் அளவிற்கு பால் எடுத்து, பாலினை கொதிக்கவைத்து 2 டீஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
அதன் பிறகு, வறுத்து வைத்துள்ள மக்கானவை சேர்த்து 10 முதல் 15 நிமிடம் வரை கொதிக்க விடவும். இந்நிலையில் அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். பால் கெட்டியான தன்மைக்கு வந்ததும், அதில் பொடியாக நறுக்கிய உலர் பழங்கள் மற்றும் உலர் பருப்புகளை சேர்த்து இறக்கினால் சுவையான மகானா கீர் தயார். இதனை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அடிக்கடி எடுத்து வரலாம். இதனை குடித்த ஒரே வாரத்தில் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
ரெசிபி – 3
ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து, 1 கப் அளவிற்கு மக்கானாவை சேர்த்து வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு, தேவையான அளவு தயிர் எடுத்து, அதில் சுவைக்கேற்ப வெல்லம் சேர்த்து வறுத்து மக்கானவை சேர்த்து நன்றாக கலந்து குடிக்கலாம்.
நீங்கள் இனிப்பிற்கு பதிலாக காரமாக சாப்பிட விரும்பினால், வெல்லத்திற்கு பதிலாக மிளகு தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, கலந்து குடித்து வரலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ரெசிபியை செய்து மதிய உணவாக உட்கொண்டு வரலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |