Mangai Pachadi Seivathu Eppadi
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் நாம் மிகவும் சுவையான, எவ்வளவு தான் சாப்பிட்டாலும் திகட்டாத மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சரி உங்களுக்கு மாங்காய் பிடிக்குமா..? இது என்ன கேள்வி மாங்காய் யாருக்கு தான் பிடிக்காமல் போகும் என்று சொல்வீர்கள். சரி மாங்காய் பிடித்திருந்தால் கண்டிப்பாக மாங்காய் பச்சடி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் அல்லவா..! ஆனால் இந்த பதிவில் கூறும் மாங்காய் பச்சடியை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள். தினமும் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். சரி வாங்க நண்பர்களே மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
மாங்காய் பச்சடி செய்வது எப்படி..?
- மாங்காய் – 3
- வெல்லம் – 1/4 கப்
- கடுகு – சிறிதளவு
- உளுந்து – சிறிதளவு
- பெருங்காய தூள் – சிறிதளவு
- வர மிளகாய் – 3
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
10 நிமிடத்தில் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி |
மாங்காய் எடுத்து கொள்ளவும்:
முதலில் 3 மாங்காய் எடுத்து கொள்ளவும். பின் அதை சுத்தமாக கழுவி தோலை நீக்கி எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் தோலுடனும் செய்யலாம்.
பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். குறிப்பாக மாங்காய் புளிப்பு மாங்காயாக இருக்க கூடாது.
பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் கால் கப் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு பிடித்தவாறு இனிப்பு சேர்த்து கொள்ளலாம்.
அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க விட வேண்டும். பின் அதை எடுத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
1 நிமிடத்தில் கொத்தமல்லி ஊறுகாய் இந்த ரகசியம் யாருக்கு தெரியும்..! |
கடாயை அடுப்பில் வைக்கவும்:
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் உளுந்து சேர்த்து கொள்ள வேண்டும். கடுகு பொரிந்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதில் சிறிதளவு பெருங்காயத்தூள், 3 வரமிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின் நாம் நறுக்கி வைத்துள்ள மாங்காயை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து மாங்காய் வெந்து வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். மாங்காய் நன்றாக வெந்து வந்ததும் அதை ஓரளவுக்கு மசித்து விட வேண்டும். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெல்ல கரைசலை இதில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பின் அதை கொதிக்கவிட்டு இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் செய்யும் போதே நாக்கில் எச்சில் ஊரும் மாங்காய் பச்சடி ரெடி..! நீங்களும் இதுபோல செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |