வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 நிமிடத்தில் மாங்காய் சட்னி ரெடி.! இப்படி செய்யுங்க டேஸ்ட் அள்ளும்.!

Updated On: March 12, 2025 1:50 PM
Follow Us:
Mangai Satni Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Mangai Satni Recipe in Tamil | மாங்காய் சட்னி செய்வது எப்படி.?

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மிகவும் சுவையான மாங்காய் சட்னி செய்வது எப்படி என்பதை (Mango Thogayal Recipe in Tamil) பின்வருமாறு கொடுத்துள்ளோம். மாங்காய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்று மாங்காய். மாங்காய் எவ்வளவு புளிப்பாக இருந்தாலும் சரி, அந்த புளிப்பு சுவைக்காகவே அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

மாங்காயில் குழம்பு வைப்பார்கள், மாங்காய் சாதம் செய்வார்கள், மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி இதுபோன்று செய்து தான் பார்த்து இருப்போம். ஆனால், மாங்காயில் சட்னி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா.? அவ்வளவு சுவையாக இருக்கும். இதனை செய்யும் முறையும் மிகவும் ஈஸி. குறைந்த நேரத்திலேயே செய்து சாப்பிடலாம்.  ஆகையால் உங்கள் வீட்டில் மாங்காய் இருந்தால் இந்த சட்னியை செய்ய மறக்காதீங்க.

Thengai Mangai Satni Recipe in Tamil:

Thengai Mangai Satni Recipe in Tamil

சட்னி செய்ய தேவையான பொருட்களின் அளவுகள்:

  • புளிப்பு மாங்காய் – 1 பெரியது
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் 
  • உப்பு – 1 டீஸ்பூன் 
  • சிகப்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் 
  • சீரகம் – 2 டீஸ்பூன் 
  • தண்ணீர் – 1/4 டம்ளர் 

தாளிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – 2 ஸ்பூன் 
  • கடலை பருப்பு – 1 ஸ்பூன் 
  • சீரகம் –  1/2 ஸ்பூன் 
  • உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன் 
  • கடுகு – 1/2 ஸ்பூன் 
  • பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் 
  • பட்டமிளகாய் – 3
  • கருவேப்பிலை – 2 கொத்து 

கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி..?

மாங்காய் சட்னி செய்முறை விளக்கம்:

 thengai mangai satni recipe in tamil

  • முதலில் மாங்காயை நன்றாக கழுவிட்டு அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள். அடுத்து, அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • அடுத்து, இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, இதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளுங்கள்.
  • பிறகு, இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, சிகப்பு மிளகாய் தூள், சீரகம் மற்றும் தண்ணீர் சேர்த்து ரொம்பவும் மைய அரைக்காமல் கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.

 மாங்காய் சட்னி செய்வது எப்படி

  • இப்போது, அடுப்பில் ஒரு தாளிப்பு பாத்திரத்தை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து பொரிய விட்டு, பெருங்காயத்தூள், பட்டமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிப்பு ரெடி செய்து, தயார் செய்து வைத்துள்ள மாங்காய் சட்னியில் தாளிப்பினை ஊற்றி கலந்து விட்டால் சுவையான மாங்காய் தேங்காய் துவையல்/சட்னி தயார்.!
  • இந்த சட்னியை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

மாங்காய் சாதம் மிக சுவையாக செய்வது எப்படி..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Chicken Dum Biryani in Tamil

ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil