மாங்காய்ல ரசமா.. வித்தியாசமா இருக்குல்ல.. பேருக்கு ஏற்றது போல்.. அதன் சுவையும் வித்தியாசமாக இருக்கும்..!

Advertisement

மாங்காய் ரசம் செய்வது எப்படி? | Mango Rasam Preparation in Tamil

நாம் பொதுவாக கடினமான அசைவ உணவுகள் உட்கொள்ளும் போது கடைசியாக ரசம் சேர்த்து சாப்பிடுவது ஏன் தெரியுமா? சிக்கன் மட்டன் எதற்கு உணவு பொருட்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்காக சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவு பொருட்களை நாம் உட்கொள்ளும் போதும் நாம் சாப்பாட்டுடன் ரசம் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பணிகள் வேகமாக நடக்கும். இத்தகைய ரசத்தை நாம் எப்பொழுது போல ஒரே மாதிரி வைக்காமல், கொஞ்சம் வித்தியாசமான முறை செய்தோம் என்றால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆக இன்றைய பதிவில் நாம் மங்காவை பயன்படுத்தி வித்தியாசமான முறையில் ரசத்தை வைக்க போகிறோம். சரி வாங்க மாங்காய் ரசம் செய்வது எப்படி என்றார் இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Equipment:

  • கடாய் – 1
  • மிக்ஸி – 1
  • குழம்பு பாத்திரம் – 1

தேவையான பொருட்கள்:

மிக்ஸியில் அரைக்க:

  • பெருங்காயம் – சிறிய கட்டி
  • வர மிளகாய் – மூன்று
  • பூண்டு – ஆறு பல்
  • மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
  • அடுப்பில் சுட்ட மாங்காய் – 2
  • தண்ணீர் – 2 ½ கிளாஸ்
  • தக்காளி – 2

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
மண் சட்டி நண்டு ரசம் டேஸ்ட் சும்மா அள்ளும்.!

ரசம் வைக்க:

  • எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி இலை – ஒரு கொத்து
  • வரமிளகாய் – இரண்டு
  • மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

வித்தியாசமான மாங்காய் ரசம் செய்முறை – Mango Rasam Preparation in Tamil:Mango Rasam

ஸ்டேப்: 1

இரண்டு மங்காவை எடுத்து அடுப்பில் நன்றாக சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளவும் அதில் வர மிளகாய் மூன்று, பூண்டு பல் ஆறு, பெருங்காயம் சிறிய கட்டி, மிளகு ஆகியவற்றை சேர்த்து பல்ஸ் பட்டனை பயன்படுத்து இரண்டு முறை அடித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

சுட்ட மங்காவை எடுத்து தோல் நீக்கிவிட்டு அவற்றில் இருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள், பின் மிக்ஸி ஜாரில் அதனை சேர்த்து ஒருமுறை அடித்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும் அவற்றில் அரைத்த மாங்காய் விழுது, பொடி செய்த மிளகு சீரகம், மஞ்சள் தூள் மற்றும் 2 ½ கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.

ஸ்டேப்: 5

பிறகு அதனுடன் உப்பு தேவையான அளவு, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இறுதியாக இரண்டு தக்காளி பழத்தை இதனுடன் பிழிந்துவிடம்.

ஸ்டேப்: 6

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
கொள்ளு சாதம் & கொள்ளு ரசம் வைப்பது எப்படி?

ஸ்டேப்: 7

எண்ணெய் சூடானதும் கடுகை சேர்க்கவும், கடுகு பொரிந்து வந்ததும் வரமிளகாய் இரண்டு செய்து வதக்கவும் பின் கலந்து வைத்துள்ள ரசம் கலவையை இவற்றில் சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்: 8

ரசம் கொத்தி வந்ததும் அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும் அவ்வளவு தான் சுவையான மாங்காய் ரசம் தயார்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement