Mango Seed Chutney Recipe in Tamil
மாங்காய் என்றாலே எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்த மாங்காய் ஆனது எல்லா நேரத்திலும் கிடைத்தாலும் கூட விலை ஆனது அதிகமாகஇருக்கும். ஆனால் சீசனில் அதனுடைய விலை ஆனது குறைவாக இருக்கும். அதனால் எல்லாரும் மாங்காயை அதிகமாக வாங்கிசாப்பிடுகிறார்கள். மாங்காய் அதனுடைய தோலை சாப்பிட்டால் கூட அதனுடைய கொட்டையை தூக்கி தான் எறிவார்கள். ஆனால் இந்த கொட்டையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்வாங்க..
சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- மாங்கொட்டை – 2 அல்லது 3
- புளி – தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் – 5
- பெருங்காயம் – 1
- உப்பு – தேவையான அளவு
- உளுந்து – 1 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
- தேங்காய் – ½ மூடி
- பூண்டு – 2 அல்லது 3 பல்
சட்னி செய்முறை:
தேங்காய் துருவி எடுத்து கொள்ள வேண்டும். பூண்டையும் தோல் உரித்து எடுத்து கொள்ள வேண்டும். புளி எடுத்து ஒரு 1 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
மாங்கொட்டையை நன்றாக கழுவி காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். மாங்காய் ஆனது நன்றாக காய்ந்ததும் அதன் உள்ளே பெரிய பருப்பு போல இருக்கும் அதனை எடுத்து கொள்ளுங்கள். இந்த உருண்டையை சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைத்து கொள்ள வேண்டும். இதனை குறைந்தது 2 அல்லது 3 மணி நேரமாவது ஊற வைத்து கொள்ளுங்கள்.
5 நிமிடத்தில் மாங்காய் சட்னி ரெடி.! இப்படி செய்யுங்க டேஸ்ட் அள்ளும்
அடுத்து கடாயில் உளுத்தப்பருப்பு, கடலைபருப்பு, பூண்டு போன்றவற்றை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இவை ஆறியதும் இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் மாங்கொட்டை பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும். உங்களுக்கு கெட்டியாக வேண்டும் என்றால் அப்படி வைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் ஊற்றி கொள்ளலாம். இந்த சட்னி ஆனது இட்லி, தோசை, சாதம் போன்ற எல்லாவற்றிற்கும் ஏற்றதாக இருக்கும்.
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |













