சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..?

மாங்காய் தொக்கு செய்வது எப்படி? (Mango Thokku Recipe Tamil)

சுவையான மாங்காய் தொக்கு என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இத்தகைய சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

மாங்காய் தொக்கு செய்முறை தேவையான பொருட்கள்:

 1. மாங்காய் – இரண்டு
 2. மிளகாய் தூள் – 1/2 கப்
 3. உப்பு – மூன்று மேசைக்கரண்டி
கோபி மஞ்சூரியன் செய்முறை..!

எண்ணெய் தாளிக்க:

 1. எண்ணெய் – 1 கப்
 2. கடுகு – 11/2 கரண்டி
 3. பூண்டு – 10 பற்கள்
 4. காய்ந்த மிளகாய் – 8
 5. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
 6. பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
 7. கருவேப்பிலை – தேவையான அளவு

கடுகு வெந்தய தூள் தயார் செய்ய:

 1. கடுகு – இரண்டு மேசைக்கரண்டி.
 2. வெந்தயம் – இரண்டு மேசைக்கரண்டி.

சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி?

(Mango Thokku Recipe in Tamil)

மாங்காய் தொக்கு செய்முறை ஸ்டேப்: 1

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, கடாய் நன்றாக சூடேறியதும் இரண்டு மேசைக்கரண்டி கடுகு, இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

கடுகு மற்றும் வெந்தயம் நன்றாக வறுத்த பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து பின்பு மிக்சியில் பொடிதாக அரைத்து கொள்ளவும்.

மாங்காய் தொக்கு செய்முறை ஸ்டேப்: 2

இப்பொழுது மாங்காய் தொக்குக்கு எண்ணெய் தாளிக்க வேண்டும், இதற்கு அடுப்பில் கடாய்  வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், 10 பூண்டு பற்கள், காய்ந்த 8 சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்.

மாங்காய் தொக்கு செய்முறை ஸ்டேப்: 3

இப்பொழுது மாங்காய் தொக்கு செய்வதற்கு இரண்டு மாங்காயை எடுத்து கொள்ளவும், அவற்றில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு நன்றாக துருவி கொள்ளவும்.

மாங்காய் தொக்கு செய்முறை ஸ்டேப்: 4

பின்பு ஒரு பவுல் ஒன்றை எடுத்து கொள்ளவும், அவற்றில் துருகிய மாங்காயை சேர்க்கவும், அதன் பிறகு அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், வறுத்து அரைத்து வைத்துள்ள கடுகு வெந்தய தூள் இரண்டு டேபிள் ஸ்பூன், மூன்று மேசைக்கரண்டி உப்பு மற்றும் தாளித்து எடுத்து வைத்துள்ள எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இப்பொழுது சுவையான மாங்காய் தொக்கு தயார் இவற்றை ஒரு மணிநேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

மாங்காய் தொக்கு செய்முறை ஸ்டேப்: 5

இந்த மாங்காய் தொக்கினை அனைத்து உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம், அதேபோல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். இந்த மாங்காய் தொக்கு செய்முறையை செய்து சுவைத்திடுங்கள்.

டேஷ்டான பால் கொழுக்கட்டை செய்யும் முறை..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!