Masala Dosa Recipe in Tamil
நண்பர்களே உங்களில் யாருக்கு தோசை பிடிக்கும்..! அப்படி பிடிக்கும் என்றால் எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு அலுத்து போயிருக்கும் அல்லவா..! அதனால் இது மாதிரியான தோசை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள். அதனால் இதுபோல் தோசை செய்து சாப்பிடுங்கள்..!
தோசையில் நிறைய வகைகள் உள்ளது. அதிலும் ஹோட்டலில் இருக்கும் சுவை அது தனியாக இருக்கும். ஆனால் உண்மையில் அப்படி ஒரு தோசையை பற்றி தான் பார்க்க போகிறோம்..! சரி வாங்க அது எப்படி செய்வது என்று பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Masala Dosa Recipe in Tamil:
தேவையான பொருட்கள்:
- கடுகு – 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 2
- அவித்த உருளைக்கிழங்கு – 2
- கேரட் – 2
- உப்பு
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி
செய்முறை:
முதலில் ஒரு கடாய் எடுத்து கொள்ளவும். அதில் 2 டேபிள் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் கடுகு போட்டு பொரிந்து வரும் நிலையில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும். அதன் பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
ரம்ஜான் ஸ்பெஷல் ஜெய்ப்பூர் மசாலா பூரி சும்மா ஜாலியா கொண்டாடுங்கள்
வெங்காயம் வதங்கியதும் அதில் அவித்த உருளைக்கிழங்கு – 2 பிசைந்து அதில் சேர்க்கவும். கேரட் துருவி சேர்த்து நன்கு கலந்த பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்பு அதில் கடைசியாக உப்பு சேர்த்து கலந்துவிட்டு கொத்தமல்லி தூவி, அதனை வதக்கி எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் தோசைக்கு தேவையான மசாலா ரெடி இப்பொது தோசையை ஊற்றவேண்டும்.
தோசையை ஊற்றி அதனை மிதமான தீயில் வைத்து, அதில் இந்த மசாலாவை எல்லா பக்கமும் தடவி அதன் மீது எண்ணெய் ஊற்றி வேகவைத்து, எப்போதும் போல் தோசை எடுக்கவும். அவ்வளவு தான் தோசை ரெடி சாதா தோசை அல்ல மசாலா தோசை.
காலிஃபிளவர் ஊறுகாய் செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |