தோசையில் இந்த மாதிரி யாரும் செய்திருக்க மாட்டார்கள்..!

Advertisement

மசாலா தோசை செய்வது எப்படி.?

இட்லி பிடிக்குமா.? தோசை பிடிக்குமா என்றால் உடனடியாக சொல்வது தோசை தான். தோசையை விரும்பாதவர்கள் என்று யாரும் இருப்பார்களா..! பொடி தோசை, முட்டை தோச, ரவா தோசை, மைதா தோசை, கோதுமை தோசை என பல வகைகள் உள்ளது. அதில் இன்றைய பதிவில் மசாலா  தோசை சுவையாக செய்வது என்று தெரிந்து கொள்வோம். இந்த மாதிரி மசாலா தோசை செய்து கொடுத்தால் வேணாம் என்றே சொல்ல மாட்டார்கள். சரி வாங்க எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

  1. ஆயில் – 2 தேக்கரண்டி 
  2. கடுகு – 1/4 தேக்கரண்டி
  3. சீரகம் – 2 தேக்கரண்டி 
  4. கடலை பருப்பு – 2 தேக்கரண்டி 
  5. வெங்காயம – 2
  6. பச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்றது
  7. இஞ்சி – சிறிதளவு 
  8. உப்பு – தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  10. பெருங்காய தூள் – சிறிதளவு
  11. உருளைக்கிழங்கு – 3

இதையும் படியுங்கள் ⇒ இந்த மாதிரி செய்து கொடுத்தால் கோதுமை தோசை வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.!

மைசூர் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  1. ஆயில் – 1
  2. கடலை பருப்பு – 1 தேக்கரண்டி 
  3. உளுந்து – 1 தேக்கரண்டி 
  4. வெங்காயம் –1
  5. பூண்டு – 5 பல் 
  6. காய்ந்த மிளகாய் –
  7. சீரகம் – 1/2 தேக்கரண்டி

சட்னி செய்முறை:

அடுப்பில் கடையை வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அதில் 1 தேக்கரண்டி கடலை பருப்பு, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1/2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 3, 5 பல் பூண்டு, சின்ன வெங்காயம் நறுக்கியது 1 சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் சிவந்த நிறம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். வதக்கிய பொருட்கள் சூடு ஆறியதும் சிறிதளவு புளி, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

மசாலா செய்முறை:

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அதில் கடுகு 1/4 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். கடுகு பொரிந்ததும் சீரகம் 1/2 தேக்கரண்டி, கடலை பருப்பு 2 தேக்கரண்டி சேர்த்து வதக்குங்கள்.

அதனுடன்  நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இடித்தது, கருவேப்பிலை சிறிதளவு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு பெருங்காய தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம சிவந்த நிறம் வந்தவுடன்  வேக வைத்து மசித்த 3 உருளைக்கிழங்கை சேர்க்கவும். சேர்த்த பொருட்கள் எல்லாம் வேகின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் கெட்டியான பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

மசாலா தோசை செய்முறை:

அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை ஊற்றுங்கள். எண்ணெய் கொஞ்சம் அதிகமாக ஊற்ற வேண்டும். தோசையின் மேல் செய்து வைத்துள்ள சட்னியை வைத்து முழுவதும் பரப்பி விடுங்கள். அதற்கு மேல் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து தோசையை மடக்கி விடுங்கள். அவ்ளோ தாங்க சூப்பரான மசாலா தோசை ரெடி.! ருசிக்கலாம் வாங்க.!

இதையும் படியுங்கள் ⇒ ஒரே மாவில் 5 வையான தோசை ரெசிபி செய்முறை..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement