மீன் குழம்பு செய்வது எப்படி தமிழ் | Fish Kulambu Recipe in Tamil
Meen Kulambu Seivathu Eppadi in tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் ருசியான மீன் குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம். மீன் குழம்பு, மீன் வறுவல் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மீன்களில் ஏராளமான வகைகள் உள்ளன, ஒவ்வொரு மீனுமே உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியவை தான்.
நாம் இந்த பதிவில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
இங்க அரை கிலோ விற்கான பொருள்களை பட்டியலிட்டுளேன் நீங்கள் உங்களூடைய கிலோவிற்கு ஏற்ப பொருள்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
- மீன் – அரை கிலோ
- புளி – தேவையான அளவு
- மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள் – 4 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
- மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – இரண்டு குழிக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் – அரைத்தது
மீன் குழம்பு செய்முறை:
ஸ்டேப்: 1
- மீன் குழம்பு செய்வது எப்படி?: ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு 1 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய் 3, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் அதில் சின்ன வெங்காயம் தேவையான அளவு சேர்த்து வதக்கவும். வதங்கிய பிறகு அதில் தக்காளி சேர்த்து தொக்கு ஆகும் வரை வதக்கவும்.
ஸ்டேப்: 2
- Fish Kulambu Recipe in Tamil: பின் புளியை எடுத்து புளிக்கரைசலை தயார் செய்து கொள்ளவும். அதில் சீரகத்தூள் 4 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பூன், மல்லி தூள் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் அரை டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து கரைத்து கொள்ளவும். பின் அதில் 1 குழிக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து அதை கடாயில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப்: 3
- Meen Kulambu Receipe in Tamil : குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து அதில் 1 குழிக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். பின் அதில் அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும். இப்போது சுவையான சூடான மீன் குழம்பு தயார்.
நெய் மீன் குழம்பு வைப்பது எப்படி |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |