மீன் புட்டு…! குழந்தைகள் சுலபமாக மீன் சாப்பிட இதை செய்துகொடுங்கள்..!

Advertisement

மீன் புட்டு செய்வது எப்படி..?

அனைத்து இனிய நெஞ்சங்களுக்கும் அன்பு வணக்கம் இன்றைய பதிவில் பொதுவாக மீன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மீன் மிகவும் பிடித்தாலும் அதனை வாங்குவதற்கு தயங்குவார்கள். காரணம் மீனில் அதிகம் முள்கள் இருக்கும் என்ற பயத்தில் அதனை வாங்க மருத்துவர்கள். அதனை மீறி வாங்கினாலும் பெரியவர்கள் அதனை சாப்பிட்டுவிடுவார்கள் ஆனால் குழந்தைகளுக்கு அதனை எடுத்து சரியாக சாப்பிடமுடியாது. அதனால் சாப்பிடாமல் விடக்கூடாது காரணம் மீன் அதில் அதிகப்படியான நன்மைகள் உள்ளது. இப்போது குழந்தைகளுக்கு பிடித்தமான மீன் புட்டு செய்வது எப்படி என்பதை பார்க்க போகிறோம்..!

மீன் புட்டு செய்ய தேவையான பொருட்கள்:

 meen puttu seivathu eppadi

தேவையான அளவு மீன்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

வெங்காயம் – 2 சின்னதாக நறுக்கியது

இஞ்சி – பெரியதாக நசுக்கியது

பூண்டு – 2 பல்

பச்சை மிளகாய் – 2

கருவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

தேவையான அளவு உப்பு

மிளகு தூள் – காரத்திற்கு தேவையானது.

சூப்பரான நெய் மீன் புட்டு செய்முறை ⇒ நெய் மீன் குழம்பு வைப்பது எப்படி

 மீன் புட்டு செய்முறை: 

ஸ்டேப் -1

முதலில் நறுக்கிய மீனை எடுத்து ஒரு கடாயில் உப்பு 1 ஸ்பூன், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அதனை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்த பின் அதனை தனியாக முள் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும் சிறிய துண்டாக உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -2

 meen puttu seivathu eppadi

இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பில்லை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

ஸ்டேப் -3 

வதங்கிய பின் அதில் மல்லித்தூள் – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் -1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

கலந்த பின் கடைசியாக உதிர்த்து எடுத்து வைத்த மீனை அதில் சேர்த்து நன்கு சேர்த்துவிடவும். கொஞ்சம் நேரம் நன்றாக கிளறி வேகவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement