Milagu Sadham Making Tips In Tamil
தற்போது குளிர் காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது என்பதால் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே மூக்கடைப்பு ஏற்பட்டால் சிலருக்கு தொண்டை வழியும் ஏற்படும். அப்பொழுது நம் வீட்டு பெரியவர்கள் பாலில் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து கொடுப்பார்கள். அத்தகைய மிளகு ஒரு மருந்தாக அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. எனவே இந்த மிளகை வைத்து மிளகு சாதம் செய்வது எப்படி என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
மிளகு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
- மிளகு
- சீரகம்
- எண்ணெய்
- நெய்
- கடலை பருப்பு
- உளுத்தம் பருப்பு
- கடுகு
- முந்திரி பருப்பு
- பெருங்காய தூள்
- பூண்டு
- வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- உப்பு
- சாதம்
- மிளகு சீரக தூள்
மிளகு சாதம் செய்முறை:

- Step 1: முதலில் மிக்சர் ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- Step 2: ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பிறகு, அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
- Step 3: அவை நன்கு வருந்த பிறகு சிறிதாக நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- Step 4: கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
- Step 5: பொடியாக அரைத்த மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
- Step 6: வேகவைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும்.
- Step 7: மேலும் சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து இறக்கினால் அவ்வளவு தான் சுவையான மிளகு சாதம் தயார்.
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |














