தீபாவளிக்கு இந்த மாதிரி மினி ஜாங்கிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

Mini Jangiri Recipe in Tamil

Mini Jangiri Recipe in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே.. வீட்டில் ஏதாவது பண்டிகை வந்தால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது என்ன பலகாரம் செய்வது என்று தான். நாம் ஏதும் பண்டிகை வந்தால் தான் இனிப்பு காரம் போன்ற பலகாரங்களை செய்ய வேண்டும் என்று நினைப்போம். அதுபோல இன்று நாம் சூப்பரான ஸ்வீட் ரெசிபி செய்ய போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய மினி ஜாங்கிரி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

தீபாவளிக்கு இந்த மாதிரி நெய் மைசூர் பாக் செஞ்சு சாப்பிட்டு பாருங்க..!

மினி ஜாங்கிரி செய்வது எப்படி..?

மினி ஜாங்கிரி – தேவையான பொருட்கள்: 

  1. வெள்ளை உளுந்து – 1 கப்
  2. பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்
  3. சோளமாவு – கால் கப்
  4. சர்க்கரை – 2 அரை கப்
  5. கலர் பவுடர் – 1 பாக்கெட்
  6. தண்ணீர் – 1 1/2 கப்
  7. ஏலக்காய் தூள் – தேவையான அளவு
  8. எண்ணெய் – தேவையான அளவு
  9. உப்பு – தேவையான அளவு

மினி ஜாங்கிரி செய்முறை: 

செய்முறை -1

ஒரு கிண்ணத்தில் 1 கப் அளவில் வெள்ளை உளுந்து எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

செய்முறை -2

பின் அதை கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு கிண்ணத்தில் மாற்ற வேண்டும்.

செய்முறை -3

பிறகு அதனுடன் சோளமாவு கால் கப் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை -4

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 1/2 கப் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

செய்முறை -5

சர்க்கரை பாகு நன்றாக கொதித்து கம்பி பதத்திற்கு வர வேண்டும். கையில் தொட்டு பார்க்கும் போது கம்பி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இரக்க வேண்டும். இப்பொழுது சர்க்கரை பாகு தயார்.

செய்முறை -6

பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்த பின் நாம் கலந்து வைத்துள்ள உளுந்து மாவை சிறிய சிறிய முறுக்கு போன்ற வடிவத்தில் ஊற்ற வேண்டும்.

இது நன்றாக பொன்னிறமாக பொரிந்து வந்தவுடன் எண்ணெயில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்.

செய்முறை -7

பின் இதை சர்க்கரை பாவில் போட்டு 2 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய மினி ஜாங்கிரி தயார்… இந்த மினி ஜாங்கிரி -யை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்..! 

தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா இப்படி செஞ்சி பாருங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal