முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி.?
முருங்கையின் அனைத்து பாகங்களும் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் காரணமாகவே தமிழர்களின் உணவு பழக்கங்களில் அதிகளவு முருங்கை கீரையை பயன்படுத்துகின்றன. சரி இந்த முருங்கை கீரையை நமது அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும். ஆனால் குழந்தைகளுக்கு இந்த முருங்கை கீரை பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. இதனை சூப் ஆக வைத்து கொடுப்பார்கள். இல்லையென்றால் சாம்பார், பொறியல் போன்றவை செய்து கொடுப்பார்கள். இப்படி செய்து கொடுத்தாலும் அதனை சாப்பிடுவதற்கு விரும்புவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் முருங்கை கீரையை துவையலாக செய்து கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இதனை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டும் சாப்பிடலாம். அதனால் வாங்க முருங்கை கீரை துவையல் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
முருங்கை கீரை துவையல் தேவையான பொருட்கள்:
- முருங்கை கீரை – 2 கப்
- புளி – பாதி எலும்பிசை அளவு
- தேங்காய் பல் – 1/2 கப்
- சின்ன வெங்காயம் – 15
- பூண்டு – 8 பல்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
- கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- புதினா இலை – சிறிதளவு
முருங்கைக்கீரை துவையல் செய்முறை:
முதலில் புளியை வெந்நீரில் ஊற வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு முருங்கை கீரையை உருவி தண்ணீரில் அலசி கொள்ளுங்கள்.
பின் அடுப்பை பற்ற வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். சிவந்த நிறம் வரும் வரை வதக்க வேண்டும். அதனுடன் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
பின் இதனுடனே சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
முருங்கை கீரை சாறு செய்வது எப்படி
வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும், கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து வதக்க வேண்டும். பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அதனுடனே அலசி வைத்துள்ள ,முருங்கை கீரையை சேர்த்து, அதனுடனே மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும், ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதனை ரொம்ப நேவாக அரைக்க வேண்டாம். கொஞ்சம் கொரகொரவென்று அரைத்து கொள்ள வேண்டும். இதனை சாதத்திற்கு தொட்டு சாப்பிட போகிறீர்கள் என்றால் தாளிக்காமல் சாப்பிடுங்கள். அதுவே இட்டலி அல்லது தோசைக்கு சாப்பிட போகிறீர்கள் என்றால் தாளித்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு முறை மட்டும் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள், அதன் பிறகு இதனை அடிக்கடி செய்து கொடுக்க சொல்வார்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |