வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு வைப்பது எப்படி? | Muttai Kulambu Seivathu Eppadi

Updated On: April 9, 2025 6:37 PM
Follow Us:
Muttai Kulambu Seivathu Eppadi
---Advertisement---
Advertisement

முட்டை குழம்பு செய்வது எப்படி? | கிராமத்து முட்டை குழம்பு

முட்டை என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் முட்டையில் குழம்பு செய்தால் சாதம் அதிகமாக சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு முட்டை குழம்பானது டேஸ்டாக இருக்கும். ஒவ்வொருவரும் முட்டை குழம்பினை பல ஸ்டைலில் செய்வார்கள். வேக வைத்த முட்டையில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது. நாம் டேஸ்டியாகவும், கிராமத்தில் செய்ய கூடியது போலவும் செய்வது எப்படி என்று இந்த முழு பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி?

முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  • முட்டை – 3
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • தக்காளி – 1 (நறுக்கியது)
  • கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

  • பட்டை – 1/2
  • கறிவேப்பிலை – சிறிதளவு 
  • கிராம்பு – 1

அரைக்க தேவையான பொருள்:

  • தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் – 2
  • பூண்டு – 4-5 பற்கள்
  • இஞ்சி – 1/2 
  • மல்லி – 1/2 டீஸ்பூன்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

முட்டை குழம்பு வைப்பது எப்படி – செய்முறை விளக்கம்:

முட்டை குழம்பு செய்வது எப்படி

ஸ்டேப்: 1

கிராமத்து ஸ்டைலில் சுவையான முட்டை குழம்பு செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை வேக வைப்பதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, முட்டைகளைப் போட்டு வேக வைத்து முட்டையின் மேல் இருக்கும் ஓடுகளை உடைக்க வேண்டும்.

ஸ்டேப்: 2

பிறகு முட்டையை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 3

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். வாணலியில் மேல் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் லேசாக வறுத்து எடுத்துவிட்டு, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி?

ஸ்டேப்: 4

அதன் பிறகு அடுப்பில் இன்னொரு வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதனுடன் பட்டை, கறிவேப்பிலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

தாளித்த பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறத்திற்கு வதக்கவும்.

ஸ்டேப்: 5

வதக்கிய பிறகு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 3-4 நிமிடம் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

பின் அதில் 1/2 -1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் கரம் மசாலா மற்றும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சூப்பரான சுவையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு தயார்.. இப்போது சாதத்தில் சுட சுட முட்டை குழம்பை ஊற்றி பரிமாறலாம்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

beetroot payasam recipe in tamil

வீட்டில் பீட்ரூட் ,சேமியா இருக்கா..? அப்போ இதை செய்து பாருங்கள்..!

potato kari recipe in tamil

புரட்டாசி பொறந்துடுச்சினு கவலை கொள்ள வேண்டாம் சாம்பாருக்கு சைடிஷ் கறிவருவல்போல உருளைக்கிழங்கு வறுவல்

valakkai varuval recipe in tamil

புரட்டாசியில் மீன் வறுவல் சாப்பிட முடியவில்லை என்று கவலை படுகிறீர்களா.! இந்த மாதிரி செய்து செய்து சாப்பிடுங்கள்..!

kalan 65 recipe in tamil

யாரெல்லாம் புரட்டாசி வாங்க சைவ 65 சாப்பிடுவோம்..!

veg omelette recepi in tamil

முட்டை இல்லாமலே ஆம்லெட் செய்ய தெரியுமா.?

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை பூஜை பிரசாதங்கள் மற்றும் வழிபடும் முறை..!

Ellu Sadam Recipe in Tamil

புரட்டாசி மாத ஸ்பெஷல் எள்ளு சாதம் இப்படி செய்து பாருங்கள்..!

palapalam kolukattai in tamil

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷலானா பலாப்பழம் பூரணம் கொழுக்கட்டை செய்து பாருங்கள்

potato payasam recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு பாயசம் செய்து விடுங்கள்