மணமணக்கும் மட்டன் குழம்புக்கு மட்டன் மசாலா எப்படி அரைக்கணும் தெரியுமா.?

Advertisement

Mutton Masala Podi Seivathu Eppadi | Mutton Masala Powder Recipe in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மட்டன் மசாலா எப்படி செய்வது.? (How to Make Mutton Masala Powder at Home in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மட்டன் குழம்பு வைக்கும்போது கடைகளில் விற்கும் மட்டன் மசாலாவை வாங்கி வந்து பயன்படுத்துவோம். இப்படி செய்வதை விட வீட்டிலேயே நாமே மட்டன் மசாலா அரைத்து செய்தால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சமையலில் மிகவும் முக்கியமான பொருள் மசாலா தான். மசாலாவின் தரத்திலும், வதக்குதலின் நிலையை பொறுத்து தான் சமையல் நன்றாக இருக்கும். ஆகையால், எந்த சமையல் செய்தாலும் அதற்கு மசாலா மிக அவசியம். அசைவ உணவுகளில் அனைவரும் விரும்பி சாப்பிடுவது மட்டன் தான். எனவே, அனைவருக்கும் விருப்பமான மட்டன் குழம்பினை சுவையாக செய்து அசத்த மட்டன் மசாலா எப்படி செய்வது.? என்பதை இப்பதிவினை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மட்டன் மசாலா பொடி செய்வது எப்படி.? | How to Make Mutton Masala Powder at Home in Tamil:

மட்டன் மசாலா பொடி செய்வது எப்படி

மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

  • மல்லி விதை – 100 கிராம்
  • சீரகம் – 50 கிராம் 
  • மிளகு – 50 கிராம் 
  • சோம்பு – 50 கிராம் 
  • பட்ட மிளகாய் – 15
  • பட்டை – 1 
  • கருவேப்பிலை – 1 கைப்பிடி 
  • உப்பு – தேவையான அளவு 

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி.?

மட்டன் மசாலா பொடி செய்முறை:

 how to make mutton masala powder at home in tamil

  • முதலில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, பாத்திரம் சூடானதும் அதில் மல்லி விதை, சீரகம், மிளகு, சோம்பு, பட்ட மிளகாய்  மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்க்கவும்.
  • அடுத்து, 1 கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலையை எடுத்து தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  • இப்போது, அடுப்பை மிதமான தீயில் வைத்து , பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும்.  மசாலா பொருட்களை நிறம் மாறி வாசம் வந்ததும், அதனை இறக்கி நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.
  • மசாலா பொருட்கள் நன்றாக ஆறியதும், அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இந்த பொடியினை ஒரு சுத்தமான பேப்பர் அல்லது பெரிய அகலமான தட்டில் கொட்டி பரப்பி விட்டு, ஆறவைத்து கொள்ளுங்கள்.
  • மசாலா பொடி நன்றாக ஆறியதும், அதனை ஒரு டப்பாவில் சேர்த்து நன்றாக மூடி வைத்து கொள்ளுங்கள்.
  • அவ்வளவு தாங்க சுவையான மணமணக்கும் மட்டன் மசாலா பொடி தயார். இந்த பொடியை நீங்கள் மட்டன் குழம்பு வைக்கும்போது எடுத்து பயன்படுத்தலாம்.

மீன் வறுவல் டேஸ்டில் தூக்கலாக இருக்க மசாலா பொடி செய்முறை விளக்கம்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement